அமராவதி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமராவதி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : மார் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மடத்துக்குளம் : அமராவதி கூட்டுறவு சர்க்கரைஆலை தொழிலாளர்கள், நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட, தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவை சம்பளத்தை உடன் வழங்க வேண்டும் என கூறி நேற்று, ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியதாவது: எரிசாராய ஆலை மூலம் லாபம் ஈட்டிய தொகையில் சம்பளம் வழங்கலாம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறோம். இதற்குத்தீர்வாக, நிலுவையான நான்கு மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும். இதோடு இனி, நிலுவை ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணிக்கொடை மற்றும் இதர தொகைகளையும் உடன் வழங்க வேண்டும். சம்பளம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X