ஆம்புலன்ஸ் மறுப்பு தள்ளுவண்டியில் உடல்| Dinamalar

ஆம்புலன்ஸ் மறுப்பு தள்ளுவண்டியில் உடல்

Added : மார் 14, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Uttar Pradesh, Refusing ambulance,kanaiyalal , உத்தர பிரதேசசம் ,ஆம்புலன்ஸ் மறுப்பு, தள்ளுவண்டியில் மனைவி உடல், இறந்த மனைவி, முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ ஆட்சி, கன்னையாலால் மனைவி சோனி, dead wife, chief minister Yogi Adityanath, BJP rule, kanaiyalal wife soni

ஆக்ரா : உ.பி.,யில், ஆம்புலன்ஸ் வராததால், உரிய நேரத்தில் சிகிச்சையின்றி இறந்த மனைவியின் உடலை தள்ளுவண்டியில் வைத்து, கணவன் எடுத்துச் சென்றார். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, மெயின்புரி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்தவர், கன்னையாலால், 36. இவரது மனைவி, சோனி, 30. சமீபத்தில், சோனிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் சேவை பிரிவுக்கு, கன்னையாலால் தகவல் கொடுத்தார்.

ஒரு மணி நேரமாகியும், ஆம்புலன்ஸ் வராததால், சோனியை, தள்ளுவண்டியில் வைத்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, சோனியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து, சோனியின் உடலை எடுத்துச் செல்ல, அமரர் ஊர்தி வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால், உடலை தள்ளுவண்டியில் வைத்து, போர்வையால் மூடி, கன்னையாலாலும், உறவினர்களும், வீட்டுக்கு எடுத்து வந்தனர்.ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படாதது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தரும்படி, மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Babu - Trivandrum,இந்தியா
15-மார்-201815:57:10 IST Report Abuse
Ram Babu தலித் பிட்படுத்தப்பட்ட ஜாதியினர் தான் ஆம்புலன்ஸ் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். வோட்டை போடும்போது பாத்து போட்டால் ரொம்ப நல்லது . ஆசை வார்த்தை ஜாலத்தை மயங்கி போட்டால் இதோ கதி தான் .
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-மார்-201814:44:56 IST Report Abuse
Kuppuswamykesavan அய்யோ, மனம் மரத்துப்போன, பல மனிதர்கள் வாழும் உலகமடா இது, இன்று, எங்கெங்கும்.
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
14-மார்-201811:04:38 IST Report Abuse
ushadevan இது போன்ற அஜாக்ரதையான மக்களை மதிக்காத செய்தி என்றால் நீங்கள் எங்கு என்று எழுதவில்லை என்றாலும் நாங்க கரக்டா புரிந்து கொள்வோம். வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X