பா.ஜ., முதல்கட்ட வேட்பாளர்கள் 22ல்...அறிவிப்பு : அமித் ஷாவிடம் 120 பேர் கொண்ட பட்டியல்-அதிருப்தியாளர்களை சரிகட்டும் பணி தீவிரம்| Dinamalar

பா.ஜ., முதல்கட்ட வேட்பாளர்கள் 22ல்...அறிவிப்பு : அமித் ஷாவிடம் 120 பேர் கொண்ட பட்டியல்-அதிருப்தியாளர்களை சரிகட்டும் பணி தீவிரம்

Added : மார் 14, 2018
Advertisement

பெங்களூரு: பல்வேறு கருத்துக் கணிப்புகளுக்கு பின், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான, 120 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராகி உள்ளது. பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, 22ம் தேதி, இந்த பட்டியலை வெளியிடவுள்ளார்.கர்நாடக சட்டசபை தேர்தல் கால அட்டவணை வெளியிடும் முன்னரே, ம.ஜ.த., 126 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன் கூட்டணி கட்சியான, பகுஜன் சமாஜ் போட்டியிடும், 22 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
தேர்தல் கமிட்டி : மற்றொரு புறம், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. மாநில தலைவர், ஜி.பரமேஸ்வர் தலைமையில், 43 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி நேற்று அறிவிக்கப்பட்டது.இவர்கள், மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான வேட்பாளர் நேர்காணல் கமிட்டியுடனும், மாநில மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், நான்கு செயலர்களுடனும் இணைந்து, 26, 27ல் வேட்பாளர்களை இறுதி செய்வர்.பா.ஜ., தரப்பில், தற்போதைய, 40 எம்.எல்.ஏ.,க்கள், பி.எஸ்.ஆர்., - கே.ஜே.பி., - ம.ஜ.த.,விலிருந்து வந்தவர்கள் என, 120 வேட்பாளர் பெயர்களை கொண்ட, முதல்கட்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுஉள்ளது.பெங்களூரு நகரம் மற்றும் ஊரக மாவட்டங்களை பொறுத்தவரையில், 28 தொகுதிகளில், யஷ்வந்தப்பூர், ராஜராஜேஸ்வரிநகர், பேட்ராயனபுரா, காந்திநகர் ஆகிய நான்கு தொகுதிகள் தவிர, மற்ற, 24 தொகுதிகளின் வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஜாதி, சமூக சேவை, கட்சி சேவை, ஒருங்கிணைப்பு, காங்கிரசுக்கு எதிரான போராட்டம், கட்சியின் உத்தரவை மதித்தல், உள்ளூரில் பிரமுக தன்மை என, பல்வேறு விஷயங்களை ஆதரித்து, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.சமாதான பணிபா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவின் தேர்தல் சாணக்கியன், பூபேந்திர யாதவ் நடத்திய இரண்டு கருத்துக் கணிப்புகள்; மாநில தலைவர் எடியூரப்பா நடத்திய கருத்துக்கணிப்பு. தனியார் அமைப்பு கருத்துக் கணிப்புக்கு பின், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் ஆலோசனை பெற்று, வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.வேட்பாளர்கள் பட்டியல், மேலிட தலைவர்கள் கையில் உள்ளது. அதை பரிசீலித்து வரும் அவர்கள், வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின், கட்சிக்குள் எழும் உட்கட்சி பூசலை தவிர்ப்பதற்காக, வெளியிடுவதற்கு முன்னரே, அதிருப்தி தலைவர்களை கண்டறிந்து, அவர்களை முக்கிய தலைவர்கள் மூலம் சமாதானப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.அனைத்தும் சரியாக நடந்த பின், 120 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, 22ம் தேதி, டில்லியில் அமித் ஷா வெளியிடுகிறார். இது பற்றி, இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை