ஸ்ரீவி., வனப்பகுதியில் கூடுதல் கண்காணிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி., வனப்பகுதியில் கூடுதல் கண்காணிப்பு

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார், குரங்கணி தீவிபத்தின் எதிரொலியாக, ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் கூடு தல் கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது.ஸ்ரீவி.,வனப்பகுதியில் பொதுமக்கள் அடிக்கடி சென்று வருவகின்றனர். சதுரகிரியில் பவுர்ணமி, அமாவாசை, பிரதோசம் நாட்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குரங்கணியில் தீவிபத்தை தொடர்ந்து ஸ்ரீவி.,வனப்பகுதியில் கண்காணிப்பு பணி உஷார்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கோடைவிடுமுறை துவங்க உள்ளநிலையில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அனுமதியின்றி வனப்பகுதிக்கு சென்று வருவார்கள். இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சதுரகிரியில் வத்திராயிருப்பு , செண்பகதோப்பில் மம்சாபுரம் போலீசாரும் முழு அளவில் கண்காணிக்க ஸ்ரீவி., டி.எஸ்.பி.,ராஜா அறிவுறுத்தியுள்ளார். வனத்துறையும் பாதுகாப்பு விதிகளை அறிவுறுத்தியுள்ளது. '' அனுமதிக்கபட்ட நாட்களில் மட்டுமே பக்தர்கள் சதுரகிரி சென்றுவிட்டு, மாலை 6:00 மணிக்குள் கீழிறங்கவேண்டும். வனத்துறை அனுமதியின்றி சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, ''மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் எச்சரித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை