வேகத்தடுப்புகளால் விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேகத்தடுப்புகளால் விபத்து

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் செங்குளம் ஜங்ஷன் பகுதியில் நடைபாதையை மறித்து,போலீசார் வேகத்தடுப்புகளை வைத்து உள்ளதால், பள்ளி மாணவர்கள் ,வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்டிலிருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் செங்குளம் ஜங்ஷனில் நான்குரோடு சந்திப்பு உள்ளது. இதை கடந்து தான் லயன்ஸ், தியாகராஜா பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். கனரகம் உட்பட நுாற்றுக்கு மேற்பட்ட வாகன போக்குவரத்து உள்ளது. இங்கு விபத்தை தடுக்க போலீசார் வேகத்தடுப்புகள் வைத்து உள்ளனர். மக்கள் நடமாடும் பாதையை மறித்து வைக்கப்பட்டு உள்ளதால், நடுரோட்டில் நடக்கும் நிலை உள்ளது. வாகனஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். நடுரோட்டில் செல்வதால் விபத்தை சந்திக்கும் அபாயமும் உள்ளது. வேகத்தடுப்புகளால் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை