குரங்கணி தீ விபத்து பலி 11 ஆக உயர்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குரங்கணி தீ விபத்து பலி 11 ஆக உயர்வு

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குரங்கணி தீ விபத்து பலி 11 ஆக உயர்வு

மதுரை: குரங்கணி தீ விபத்தில் சிக்கி, மதுரையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு விவேக் மனைவி, திவ்யா, 25, நேற்று பலியானார். இதனால், பலி, 11 ஆக உயர்ந்தது.
சென்னை, ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த, 39 பேர், 11ம் தேதி, குரங்கணி மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்தனர். அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, ஒன்பது பேர் உயிரிழந்தனர்.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, சென்னை நிஷா, 27, நேற்று முன்தினம் பலியானார். தீ விபத்தில், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த நான்கு பேர், படுகாயம் அடைந்தனர். இவர்களில், சாப்ட்வேர் இன்ஜினியர், விவேக், 26, அவரது நண்பர், தமிழ்ச்செல்வன், 26, ஆகியோர் பலியாயினர். இருவரின் உடல்களும், நேற்று முன்தினம் இரவு, கவுந்தப்பாடியில் தகனம் செய்யப்பட்டன. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, விவேக் மனைவி, திவ்யா, 25, நேற்று மதியம், 12:00 மணியளவில் இறந்தார். இவர், கோபியில், ஒரு கல்லுாரியில் பேராசிரியையாக பணிபுரிந்தார். சோகத்தில் இருந்த, விவேக் உறவினர்கள், கடும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். குரங்கணி தீ விபத்து பலி, 11 ஆக உயர்ந்துள்ளது.---விபத்து தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். போடி வனப் பகுதிக்கு உட்பட்ட முந்தல் வனப்பிரிவு வனவராக, ஜெய்சிங் பணிபுரிந்தார். இவர், தீ விபத்து நடந்த கொட்டக்குடி வனப்பிரிவிற்கு, கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.தீ பரவும் இடங்களை முன்பே கண்காணிக்காதது குறித்து, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பின், ஜெய்சிங்கை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட வன அலுவலர், ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ராஜேந்திரன் கூறுகையில், ''மாவட்ட வனத்துறையில் வனக்காப்பாளர், காவலர் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.''முதல்கட்ட விசாரணையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, வனவர் ஜெய்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மேல் விசாரணை நடக்கிறது,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X