விருதுநகர் எஸ்.பி., ராஜராஜன் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகர் எஸ்.பி., ராஜராஜன் அறிவுரை

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர், ''சட்டத்திற்கு முரணான குழந்தைகளை,லாக்-அப், ஜெயிலில் வைக்க கூடாது,'' என, விருதுநகர் எஸ்.பி., ராஜராஜன் பேசினார்.விருதுநகர் எஸ்.பி., அலுவலக கூட்டரங்கில் நடந்த ,குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த திறன்வளர்ப்பு பயிற்சியில் அவர் பேசியதாவது:போலீஸ் அதிகாரிகளுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் தெரியவேண்டும். சட்டத்திற்கு முரணான குழந்தைகளை, லாக்-அப், ஜெயிலில் வைக்க கூடாது. குழந்தைகள் மீது வன்முறை தொடர்பாக, பெற்றோர், பாதுகாவலர் புகார் கொடுக்க தயங்கும்போது, போலீஸ் ஸ்டேஷனில் உள்ள குழந்தை நல அலுவலர் ஆலோசனை அளிக்கவேண்டும். போதை, புகையிலை பொருட்கள் விற்பனையில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் வழக்கு பதியவேண்டும், என்றார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், குழந்தைகள் மனநல ஆலோசகர் ஜனார்த்தனன்பாபு பேசினர். ஏற்பாடுகளை குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை