கூடுதுறையில் வற்றியது காவிரி : பக்தர்களுக்கு தண்ணீர் தொட்டி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடுதுறையில் வற்றியது காவிரி : பக்தர்களுக்கு தண்ணீர் தொட்டி

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கூடுதுறையில் வற்றியது காவிரி   : பக்தர்களுக்கு தண்ணீர் தொட்டி

பவானி: கூடுதுறையில், பக்தர்கள் குளிக்க, தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில், தமிழக அளவில், பிரசித்தி பெற்ற, பரிகார தலமாக உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநில பக்தர்களும் வருகின்றனர். மூன்று நதி சங்கமிக்கும் கூடுதுறையில், பரிகார பூஜை செய்து வழிபடுகின்றனர்.தற்போது, மேட்டூர் அணையில் இருந்து, காவிரி ஆற்றில், 500 கன அடி நீர், குடிநீருக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றி காணப்படுகிறது.இதனால், கூடுதுறைக்கு வரும் பக்தர்கள், குளிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதை தவிர்க்க, கோவில் நிர்வாகம் சார்பில், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக, தொட்டியில் தண்ணீர் நிரப்பி, குளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-மார்-201809:55:51 IST Report Abuse
Bhaskaran வான் பொய்த்தாலும் தான் பொய்யா மலைத்தலயா காவேரி யின் கதிகண்டு நெஞ்சம் குமுறுவதைத்தவிர வேறுஒன்றும் செய்யமுடியாத நிலை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை