எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து| Dinamalar

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து

Added : மார் 14, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து

புதுடில்லி: டில்லியில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, காங்., மூத்த தலைவர், சோனியா நேற்று விருந்தளித்தார். லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. மத்திய அமைச்சரவையிலிருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ளது. மேலும், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான மம்தா, பா.ஜ., - காங்., அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், காங்., மூத்த தலைவர் சோனியா, டில்லியில் தனது வீட்டில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நேற்றிரவு விருந்தளித்தார்.இதில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், ராஷ்டிரீய ஜனதாதளம் சார்பில் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி சார்பில் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் சதிஷ் சந்திர மிஸ்ரா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.மேலும், திரிணமுல் காங்., சார்பில் சுதீப் பண்ட்யோபாத்யாயா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சரத் யாதவ், அஜித் சிங், இந்திய கம்யூ., தேசிய செயலர் ராஜா, தி.மு.க., சார்பில் கனிமொழிஎம்.பி., உட்பட பலர் பங்கேற்றனர்.
காங்., சார்பில், கட்சி யின் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே.அந்தாணி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தல் குறித்தும், பா.ஜ.,வுக்கு எதிராக, ஓரணியில், எதிர்க்கட்சிளை ஒருங்கிணைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்., மூத்த தலைவர் சூரஜ்வாலா கூறுகையில், ''அரசியல் நோக்கத்தில், இந்த விருந்து நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளிடம் நட்புறவை ஏற்படுத்தவே நடத்தப்பட்டது. பார்லி., முடக்கத்திற்கு தீர்வு காணும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை. அதுபற்றியும், வங்கி மோசடி குறித்தும் விருந்தில், தலைவர்கள் விவாதித்தனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-மார்-201811:13:15 IST Report Abuse
Kuppuswamykesavan யப்பா, நீங்க, காமெடி கீமெடி எதும் பண்ணலைதானே?, விருந்தில்.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
14-மார்-201809:33:54 IST Report Abuse
rajan.  இங்கு கூடிய நபர்கள் பெரும் தலைகள் தங்கள் ஊழல் சொத்துக்களை பாதுகாக்க ஓன்று கூடி இருக்கிறார்களே அல்லாமல் மக்கள் நலன் கருதி ஓன்று சேரவேயில்லை என்பது மட்டும் உண்மை. இவர்களால் ஒரு தெளிவான சிந்தனை உடைய எதிர்க்கட்சியாக பார்லிமென்டில் செயல் பட முடியவில்லை முடக்கினார்கள், ஆனால் ஊழலில் முழு ஒற்றுமை என்பதை மறுக்க முடியாது. அத்தனையும் ஒழித்து கட்ட வேண்டிய கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Gopalsami.N - chennai,இந்தியா
14-மார்-201807:24:30 IST Report Abuse
Gopalsami.N பாரதப்போர். சத்யம் வெல்லட்டும். அதர்மம் அழிந்து புதிய பரதம் உருவாகட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X