மதுரையில் கவர்னர் புரோஹித் ஆறுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கவர்னர் புரோஹித் ஆறுதல்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மதுரையில் கவர்னர் புரோஹித் ஆறுதல்

மதுரை: குரங்கணி தீ விபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் ஆறுதல் கூறினார்.குரங்கணி தீ விபத்தில் சிக்கிய, 39 பேரில்,சென்னை, ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த, 16 பேர், சிகிச்சைக்காக மதுரை வந்தனர். இதில், எட்டு பேர், மதுரை அரசு மருத்துவமனை, மற்றவர்கள் சென்னை, கோவை, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஆறுதல் கூறினார். அவர்களது உறவினர்களிடம், சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:குரங்கணியில் இருந்து, 16 பேர் சிகிச்சைக்காக இங்கு வந்தனர். இவர்களில், மூன்று பேர், சென்னை, கோவை, ஈரோட்டுக்கு சொந்த விருப்பத்தின்படி சென்றனர். 13 பேரில், நான்கு பேர் மதுரை தனியார் மருத்துவமனையிலும், ஒன்பது பேர் அரசு மருத்துவமனையிலும் உள்ளனர்.இவர்களுக்கு சிகிச்சை அளிக்க, பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர்கள் ஒன்பது, சிறுநீரகவியல் டாக்டர்கள், 12, மனநல டாக்டர்கள், ஆறு என, 33 டாக்டர்கள், 74 நர்சுகளை நியமித்துள்ளோம். தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று, சம்பவ இடத்தை, 'வீடியோ' எடுத்து, தேனி கலெக்டருக்கு அனுப்பி, மீட்பு பணியை துரிதப்படுத்த உதவிய, '108' ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஜெகதீசன், செல்வத்தை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை