கோடை மின் தேவை: கை கொடுக்கிறது நீலகிரி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடை மின் தேவை: கை கொடுக்கிறது நீலகிரி

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோடை மின் தேவை: கை கொடுக்கிறது நீலகிரி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தில், 12 மின் நிலையங்கள் உள்ளன. இவை, மொத்தம், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.கோடைகால மின் தேவையை சமாளிக்கும் வகையில், 89 அடி உயரம் கொண்ட குந்தா; 156 அடி உயரம் கொண்ட கெத்தை அணைகளில், முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கப்பட்டு, காலை, மாலை நேரம் அதிகபட்ச மின் உற்பத்தி செய்யப்படுகிறது.தமிழகத்தில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றின் மூலம் தற்போது, நாளொன்றுக்கு, 150 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.இதில், நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே, தினசரி, 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் ரகு கூறுகையில், ''கோடை கால மின் தேவையை சமாளிக்கும் வகையில், நீர் மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன.''குந்தா, கெத்தை அணைகளில், முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கப்பட்டு, உச்ச மின் தேவை பூர்த்திசெய்யப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை