'சித்தராமையா கூறியதால் தான் சிறையில் சசிகலாவுக்கு சலுகை'| Dinamalar

'சித்தராமையா கூறியதால் தான் சிறையில் சசிகலாவுக்கு சலுகை'

Added : மார் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement

பெங்களூரு: சிறையில் சசிகலாவுக்கு தனி அறை, தனி அதிகாரி, சிறப்பு பாதுகாப்பு ஆகிய விஷயங்களை செய்து கொடுத்தது பற்றி, விசாரணை கமிஷன் அதிகாரியிடம், ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சத்ய நாராயண ராவ் கூறியதை, பா.ஜ., - எம்.பி., ஷோபா நேற்று வெளியிட்டார்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில், சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக, அப்போதைய சிறைத்துறை, டி.ஜி.பி., சத்ய நாராயணராவ், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, அப்போதைய சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா கூறியிருந்தார்.இது தொடர்பாக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்,அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.கடந்த, 2017 ஜூலை, 25ல், சத்ய நாராயணராவிடம் நடத்திய உயர்மட்ட விசாரணை அறிக்கையை, பா.ஜ., - எம்.பி., ஷோபா நேற்று வெளியிட்டார்.முதல் வகுப்பு வசதிஐந்து பக்கம் அடங்கிய அந்த அறிக்கையில், சத்ய நாராயணா கூறியுள்ளதாவது:மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைந்த பின், முதல் வகுப்பு வசதி செய்து கொடுப்பது பற்றி, அவர் தரப்பு வக்கீல் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, நீதிமன்றம் கூறியது.சிறை விதிமுறைப்படி மட்டுமே வசதி செய்ய வேண்டும். சிறப்புசலுகைகள் கூடாது என, தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தேன்.'சாதாரண கைதி என்ப தால், முதல் வகுப்பு வசதி கொடுக்கலாம்' என, சிறை விதிமுறை உள்ளதால், இது குறித்து முடிவெடுக்காமல், உள்துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.ஒரு மாதமாகியும், அங்கிருந்து, எவ்வித பதிலும் வரவில்லை.இதற்கிடையில், முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா அழைப்பதாக கூறி, அவரது உதவியாளர், வெங்கடேஷ், கே.பி.சி., விருந்தினர் மாளிகைக்கு வரச்சொன்னார்.சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது என, விசாரித்தார்.முதல்வர் கூறியதாக, கட்டில், மெத்தை, தலையணை வழங்கும்படி தெரிவித்தார். அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதால், அந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.சசிகலாவை கவனிப்பதற்காக, கண்காணிப்பாளர் அனிதாவை நியமித்து, தினமும் அறிக்கை வழங்கும்படி கூறினேன்.சிறையில் நேரடியாக ஆய்வு செய்த போது, சசிகலா, இளவரசிக்கு சிறப்பு வசதிகள் செய்யவில்லை என்பதை பார்த்தேன். சிறப்பு வசதி செய்து கொடுக்கும்படி, வாய் மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ கூட கூறவில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனுமதி வழங்கவில்லைஇதன்பின், கமிஷன் தலைவர், வினய்குமார் கேட்ட கேள்விக்கு, சத்ய நாராயணராவ் அளித்த பதில் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன; அதில் அவர் கூறியுள்ளதாவது:கடந்த, 2017 பிப்., 14ல், தலைமை கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில், பெண் கைதிகள் அடைக்கப்படும் முதல் மாடியில், சசிகலாவுக்கு தனி வராண்டா, தனி அறை வழங்கும்படி, நான் உத்தரவிட்டிருந்தது குறித்து கேட்கிறீர்கள்.சசிகலா, இளவரசி அடைக்கப்பட்டிருந்த முதல் மாடியின் வராண்டாவில், பாதுகாப்பு கருதித் தான், வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
23-மார்-201814:13:49 IST Report Abuse
Ramamoorthy P இந்த பித்த ராமையாவை எத்தனை கோடிக்கு விலைக்கு வாங்கினார்களோ?
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
23-மார்-201811:08:03 IST Report Abuse
Darmavan எல்லாமே ஜோடிக்கப்பட்ட நாடகமாக தெரிகிறது .
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
22-மார்-201804:48:29 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நம்புங்கள் மக்களே நம்புங்க எல்லாமே முறைப்படியே தான் நடந்துட்டுதாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை