ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ: ஜெயகுமார் கிண்டல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ: ஜெயகுமார் கிண்டல்

Added : மார் 14, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Minister Jayakumar,Kurangani fire accident,loudspeaker Vaiko,ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ, அமைச்சர் ஜெயகுமார்,  குரங்கணி காட்டுப் பகுதி, லவ்ட் ஸ்பீக்கர்,குரங்கணி தீ விபத்து, 
Born with the loudspeaker Vaiko,  Kurangani forest area, loudspeaker,

சென்னை: ''மலையேற்றத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: குரங்கணி காட்டுப் பகுதியில், 25க்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன. தீ விபத்தில் சிக்கியவர்கள், அனுமதி இல்லாத வழியில் சென்றுள்ளனர்.இதை பாடமாக எடுத்துக் கொண்டு, மலையேற்றத்திற்கு விதிமுறைகள் வகுத்து, எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். மலையேற்றத்தை தடை செய்ய முடியாது; அதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். அ.தி.மு.க., கொடி, சின்னத்தை, யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ பிறக்கும் போதே, 'லவ்ட் ஸ்பீக்கர்' என்ற ஒலிபெருக்கியுடன் பிறந்தவர்; நான் அவ்வாறு பிறக்கவில்லை. அவரை போல், நான் வீரவசனம் பேசுவதில்லை. குற்ற பின்னணி உள்ளவர்கள், வேட்பாளராக வரக்கூடாது என்பது தான், எங்கள் கருத்து. சட்ட சபை செயலர் நியமனத்தில், சபாநாயகர் முடிவை விமர்சிக்கக் கூடாது. விதிகளுக்கு உட்பட்டே நியமனம் நடந்துள்ளது. தி.மு.க., துாண்டுதலில், சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
12-ஏப்-201819:54:18 IST Report Abuse
Palanisamy T எதையும் ஒளிவு மறைவின்றிப் பேசும் வைகோ அவர்கள் ஒலிப் பெருக்கியுடன் பிறந்தாலும் பரவாயில்லை அவரால் மக்களுக்கு எந்தப் பாதிப்புமில்லை அவர் ரொம்ப வெளிப் படையானவர் அவரை நீங்கள் ஏன் கிண்டல் செய்ய வேண்டும்ஆனால் நீங்கள் அப்படியில்லையே திராவிடக் கட்சிகளென்கின்கிறீர்கள் நீங்கள் சுயநல வாதிகள் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் நல்லாட்சிக் கொடுக்க முடியவில்லை ஊழல் செய்வது உங்களதுக் கலாச்சாரம். இதனால் மக்கள் அன்றாடம் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றார்கள் இப்படிப் பார்த்தால் வைகோ அவர்கள் எவ்வளவோ மேல்
Rate this:
Share this comment
Cancel
Nesan - JB,மலேஷியா
12-ஏப்-201812:14:52 IST Report Abuse
Nesan Dear Mr.Jeyakumar. உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது அவரை கிண்டல் அடிக்க. நாங்கள் கிண்டல் அடிக்கலாம், அவர் பல பேட்டிகளை பார்த்தவர். ஆனால் நன்கு பேச தெரிந்தவர். அவரை எங்கு விட்டாலும் வாய் சவாடாலில் தப்பி வந்து விடுவார், நீங்கள் கிணத்து தவளை. இந்த ஆட்சியூடா நீங்க கோவிந்தா.
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-மார்-201814:55:10 IST Report Abuse
Vijay D Ratnam சவடால் அடிக்கும் வைகோ, சீமான், வேல்முருகன், திருமாவளவன் போன்ற பஃபூண்கள் இல்லாவிட்டால் தமிழ்நாட்டு அரசியல் களைகாட்டாது அமைச்சரே. ஏன் ஒங்க கட்சியில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு மாதிரி கோமாளிகள் இல்லையா?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X