ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ: ஜெயகுமார் கிண்டல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ: ஜெயகுமார் கிண்டல்

Added : மார் 14, 2018 | கருத்துகள் (27)
Advertisement
Minister Jayakumar,Kurangani fire accident,loudspeaker Vaiko,ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ, அமைச்சர் ஜெயகுமார்,  குரங்கணி காட்டுப் பகுதி, லவ்ட் ஸ்பீக்கர்,குரங்கணி தீ விபத்து, 
Born with the loudspeaker Vaiko,  Kurangani forest area, loudspeaker,

சென்னை: ''மலையேற்றத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: குரங்கணி காட்டுப் பகுதியில், 25க்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன. தீ விபத்தில் சிக்கியவர்கள், அனுமதி இல்லாத வழியில் சென்றுள்ளனர்.இதை பாடமாக எடுத்துக் கொண்டு, மலையேற்றத்திற்கு விதிமுறைகள் வகுத்து, எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். மலையேற்றத்தை தடை செய்ய முடியாது; அதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். அ.தி.மு.க., கொடி, சின்னத்தை, யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ பிறக்கும் போதே, 'லவ்ட் ஸ்பீக்கர்' என்ற ஒலிபெருக்கியுடன் பிறந்தவர்; நான் அவ்வாறு பிறக்கவில்லை. அவரை போல், நான் வீரவசனம் பேசுவதில்லை. குற்ற பின்னணி உள்ளவர்கள், வேட்பாளராக வரக்கூடாது என்பது தான், எங்கள் கருத்து. சட்ட சபை செயலர் நியமனத்தில், சபாநாயகர் முடிவை விமர்சிக்கக் கூடாது. விதிகளுக்கு உட்பட்டே நியமனம் நடந்துள்ளது. தி.மு.க., துாண்டுதலில், சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement