தி.மு.க., - மா.செ.,க்களால் ஐ.டி., அணியில் சலசலப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - மா.செ.,க்களால் ஐ.டி., அணியில் சலசலப்பு

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணிக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க, மாவட்ட செயலர் கள் சிலர், தகுதி இல்லாத வர்களை பரிந்துரை செய்திருப்பதால், அந்த அணியில் சலசலப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு, தகவல் தொழில்நுட்பம் பெரிதும் கை கொடுக்கிறது. ஐ.டி., அணி எனப்படும், தகவல் தொழில்நுட்ப அணியை, தேர்தலுக்கு முன் வலுப்படுத்த, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. அதற்காக, மாவட்ட அளவிலும், சட்டசபை தொகுதி அளவிலும், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப அணி செயலராக, எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். அவர், தகவல் தொழில்நுட்ப அணியை, மேம்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.மாவட்ட அளவில், ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். தகுதியான நபர்களிடம், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தலைமைக்கு பரிந்துரை செய்து வருகிறார்.உள்ளாட்சி தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலின் போது, தகவல் தொழில்நுட்ப அணியை, முழுவீச்சில் பிரசாரத்திற்கு பயன்படுத்த, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.இதை அறிந்த, மூத்த மாவட்ட செயலர்கள் சிலர், தங்களின் ஆதரவாளர்களை, தகவல் தொழில்நுட்ப அணிக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கும்படி, அந்த அணி நிர்வாகிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த அணியில் செயல்பட தகுதியற்றவர்களை, மாவட்ட செயலர்கள் பரிந்துரை செய்வதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்வது என, முடிவு செய்துள்ளனர். அவர், அந்த நபர்களை விசாரித்து, தகுதி இருப்பதாக கருதினால், தகவல் தொழில்நுட்ப அணியில் சேர்ப்பது என, தீர்மானித்துள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மார்-201803:20:56 IST Report Abuse
ஆப்பு ஐ.டி அணியில்தான் காசு பாக்க வாய்ப்பு....மணல் கொள்ளை, சாராயக் கொள்ளை எல்லாம் பழைய டெக்னிக்....மோடி வழியில் எல்லோரும் டிஜிட்டலுக்கு மாறிடுங்கோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை