நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் : சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 9 பேர் பலி| Dinamalar

நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் : சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 9 பேர் பலி

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் : சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 9 பேர் பலி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில், நக்சலைட்கள் மறைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, ஒன்பது வீரர்கள் உயிரிழந்தனர்; இருவர் காயமடைந்தனர்.சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. நக்சலைட்கள் பிரச்னை அதிகமுள்ள, சுக்மா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், நேற்று பகலில் ரோந்து பணியில் ஈடுபட்டுஇருந்தனர்.அப்போது, சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், அவர்கள் சென்ற வாகனம் வெடித்துச் சிதறியது. இதில், ஒன்பது வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த இரு வீரர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சுக்மா மாவட்டம், பேஜி பகுதியில், 2017 மார்ச், 11ல், நக்சலைட்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்ததில், ரோந்து பணியில் இருந்த, 12 வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஏப்., 24ல் நடத்தப்பட்ட தாக்குதலில், 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின், இந்த மாவட்டத்தில் நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் இது.நக்சலைட்கள் நடத்திய தாக்குதல் வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்புக்காக, உயிர் தியாகம் செய்தவர்களை வணங்குகிறேன்.

ராஜ்நாத் சிங்,மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
14-மார்-201806:21:15 IST Report Abuse
NARAYANAN.V உள்துறை அமைச்சகத்தின் உள்ளிருந்து கொர் கொர் என்ற சத்தம் பி.ஜே.பி ஆட்சி தொடங்கின நாளிலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை