செம்மரம் கடத்தினால் சொத்து பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செம்மரம் கடத்தினால் சொத்து பறிமுதல்

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பதி: 'ஆந்திர வனத்தில், செம்மரக்கட்டை கடத்துவோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்ப்படும்' என, அம்மாநில வனத்துறை எச்சரித்துள்ளது.ஆந்திராவில், முதல்வர், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. மாநில வனத்துறை அதிகாரி, மல்லிகார்ஜுன ராவ், திருப்பதி கபிலதீர்த்தத்தில் உள்ள, செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தை நேற்று பார்வையிட்டார்; அப்போது, அவர் கூறியதாவது:ஆந்திர வனத்தில் செம்மரக்கட்டை வெட்ட, தமிழகத்தில் உள்ள மலைக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருகின்றனர். அவர்கள் செம்மரம் வெட்ட வருவதை தடுக்க, ஆந்திர செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு, சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது; இது, வரவேற்கத்தக்கது.விரைவில், செம்மரக் கடத்தல்காரர்களின் சொத்து விபரங்களை சேகரித்து, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய, ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செம்மரக் கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு வரும், 1,500 டன் செம்மரக் கட்டைகளை விற்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதேபோல் கூடுதலாக, 2,500 டன் செம்மரக்கட்டைகளை விற்க அனுமதி கோரப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriman - Chennai,இந்தியா
14-மார்-201815:33:25 IST Report Abuse
Sriman சந்திரபாபு நாயுடு அவர்களே, அதுமாதிரி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், போலீஸ், கமிஷன் பெரும் அரசியல்வாதிகள் சொத்துக்களையும் பறிமுதல் செய்யலாமே. கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஏன் நீங்க கூட அரசியலுக்கு வந்த புதிதில் எங்க கட்டுமரம் மாதிரி பஞ்சத்தில் அடிபட்டவர்தான். ஆனால் இப்போது சொத்து என்று பார்த்தால்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை