பழமையான இன்ஜின் 'செல்பி' எடுக்க வாய்ப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பழமையான இன்ஜின் 'செல்பி' எடுக்க வாய்ப்பு

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புவனேஸ்வர்: ஒடிசாவில், சம்பல்பூர் மாவட்டம், கெட்ராஜ்பூர் பகுதியில் உள்ள, பாரம்பரிய பூங்காவில், 100 ஆண்டுகள் பழமையான, நீராவி ரயில் இன்ஜின், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. 1908ல், ஸ்காட்லாந்து நிறுவனம் தயாரித்த இந்த நீராவி இன்ஜின், மேற்கு வங்கம் மற்றும் மஹாராஷ்டிராவின், நாக்பூர் இடையில் இயக்கப்பட்ட மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயன்படுத்தப்பட்டது.தற்போது, கெட்ராஜ்பூர் பகுதியில் உள்ள, பாரம்பரிய பூங்காவில், இந்த நீராவி இன்ஜின் நிறுத்தப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இன்ஜினுக்கு அருகில் நின்று, 'செல்பி' எடுக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. விரைவில், பழங்கால ரயில்வே சிக்னலும், இந்த இன்ஜினுக்கு அருகில் நிறுவப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-மார்-201809:20:22 IST Report Abuse
Loganathan Kuttuva திருச்சி ஜங்க்ஷன் நுழைவாயிலில் நீராவி எஞ்சின் பார்வைக்கு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை