விமானம் பறக்க தடை : பயணியர் அவதி| Dinamalar

விமானம் பறக்க தடை : பயணியர் அவதி

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி: அடிக்கடி இன்ஜினில் பழுது ஏற்படுவதால், 'இண்டிகோ, கோ ஏர்' நிறுவனங்களைச் சேர்ந்த, 11 விமானங்கள் பறப்பதற்கு, விமான போக்குவரத்து இயக்குனரகம் தடை விதித்துள்ளது.இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களில், குறிப்பிட்ட ரகத்தைச் சேர்ந்த இன்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த இன்ஜின்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால், விமானம் அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.நேற்று முன்தினம், இண்டிகோ விமான இன்ஜினில் பழுது ஏற்பட்டதால், ஆமதாபாத் விமான நிலையத்தில், அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, இண்டிகோ நிறுவனத்தின் எட்டு விமானங்களும், கோ ஏர் நிறுவனத்தின் மூன்று விமானங்களும் பறப்பதற்கு, விமான போக்குவரத்து இயக்குனரகம் தடை விதித்தது.ஏற்கனவே, மூன்று இண்டிகோ விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது, எட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பல நகரங்களுக்கு இயக்கப்படும், 47 விமானங்களை, இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால், அதில் செல்லவிருந்த பயணியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 'பயணியர் விரும்பினால், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு, கூடுதல் கட்டணமின்றி, வேறு நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்படும் அல்லது டிக்கெட்டை ரத்து செய்தால், ரத்து கட்டணமின்றி, முழு தொகையும் திரும்ப வழங்கப்படும்' என, இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X