கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்பம், 'கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.கள்ளர் பள்ளி சங்க மாவட்ட துணை செயலர் தே.சுந்தர் கூறியிருப்பதாவது : எங்கள் சங்க மாவட்ட செயலாளர் வாஞ்சிநாதனை கடந்தாண்டு ஜன.,13 ல் அப்போதைய இணை இயக்குனர் பொன்.குமார் ஆசிரியர் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்தார். விசாரணையில் அவர் மீது எவ்வித குற்றமும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பணிபுரிந்த போடி கிழக்கு கள்ளர் பள்ளிக்கு பணி ஆணை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குனரகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பணியாற்றும் கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் 3 கட்ட போராட்டங்கள் நடத்துவது என செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கருப்பு பட்டை அணிந்து பணி செய்வது, மார்ச் 29 ல் மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் அலுவலகத்தில் ஏழு மாவட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான உண்ணாவிரதம் இருப்பது, ஏப். 12 ல் சென்னை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் இயக்குனரகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X