கோவாவில் ஜனாதிபதி ஆட்சி? : சிவசேனா திடீர் கோரிக்கை | Dinamalar

கோவாவில் ஜனாதிபதி ஆட்சி? : சிவசேனா திடீர் கோரிக்கை

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement

பனாஜி: 'கோவாவில் முதல்வர் இல்லாததால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என, சிவசேனா வலியுறுத்தி உள்ளது.கோவாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மனோகர் பரீக்கர் முதல்வராக உள்ளார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள, முதல்வர் பரீக்கர், சிகிச்சை பெற, அமெரிக்கா சென்றுள்ளார்.இந்நிலையில், கோவா மாநில, சிவசேனா செய்தித் தொடர்பாளர், ராக்கி பிரபுதேசாய் நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவா முதல்வர், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால், தலைமை இல்லாத மாநில மாக, கோவா உள்ளது. சுரங்கத் தொழில் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் தொடர்பாக முடிவெடுக்க, யாருக்கும் அதிகாரம் கிடையாது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கோவாவில் உள்ள அனைத்து சுரங்கங்களில் நடக்கும் பணிகளை, 16க்குள் நிறுத்த வேண்டும். இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோருக்கு, பொய் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில், நல்ல தீர்வு கிடைக்கவில்லை.கேபினட் ஆலோசனை குழுவிடம் இருந்து, நம்மால் நல்ல தீர்வை எதிர்பார்க்க முடியாது. மக்கள் நலனில், அதற்கு அக்கறை கிடையாது. எனவே, கோவாவில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.முதல்வர் மனோகர் பரீக்கர், அமெரிக்கா செல்லும் முன், மாநில நிர்வாகத்தை வழிநடத்த, விஜய் சர்தேசாய், சுதீன் தவாலிகர், பிரான்சிஸ் டிசோசா ஆகிய மூவர் அடங்கிய, கேபினட் ஆலோசனைக் குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது.சிவசேனா, மத்தியில், பிரதமர் மோடி தலைமையில், தே.ஜ., கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது.

Advertisement