2025க்குள் காசநோயை ஒழிக்க பிரதமர் இலக்கு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

2025க்குள் காசநோயை ஒழிக்க பிரதமர் இலக்கு

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
2025க்குள் காசநோயை ஒழிக்க பிரதமர் இலக்கு

புதுடில்லி: நாடு முழுவதும், 2025க்குள், காசநோயை ஒழிக்கும் நோக்கில், தீவிர பிரசாரத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.டில்லியில் நேற்று, காசநோய் தொடர்பான மாநாடு நடந்தது. இதை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:காசநோயை, 2030க்குள் ஒழித்துக்கட்ட, உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்து உள்ளன. அதற்கு, ஐந்து ஆண்டுகள் முன்பாக, 2025க்குள், காசநோயை இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும்.காசநோயை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், போதிய பலன் அளிக்கவில்லை. காசநோயை ஒழித்துக் கட்டுவதில், மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த நோயை ஒழிப்பதில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும்.காசநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கும்படி, அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுக்கும், கடிதம் எழுதி உள்ளேன். நம் நாட்டில் எளிதில் பரவக்கூடிய தொற்று வியாதியாக, காசநோய் உள்ளது. இந்நோயால், ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-மார்-201810:41:19 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> புகையிலை அந்த எச்சிலை கண்டபடி துப்பி நாசம் செய்றாங்க பலர் பீடி சிகார சிகரெட் என்றும் புகைச்சு புகை வெளியிடுறானுக இப்போதுபொம்பளைகளும் புகைக்குதுங்க வடநாட்டுலே பீடி வலிப்பது லேடீஸ் களிடையே ரொம்பவே காமன் , பல விதத்துலேயும் கேடு விளைவிப்பதால் பாதிப்பு டி பீ வரதுக்கு முக்கியகாரணம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை