டில்லி முதல்வரின் ஆலோசகர் ராஜினாமா| Dinamalar

டில்லி முதல்வரின் ஆலோசகர் ராஜினாமா

Added : மார் 14, 2018
Advertisement

புதுடில்லி: டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வரின் ஆலோசகராக, 2017ல், வி.கே.ஜெயின் நியமிக்கப்பட்டார். முதல்வர் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது தாக்கப்பட்டதாக, மாநில தலைமை செயலர், அன்ஷு பிரகாஷ் புகார் கூறியிருந்தார். 'தலைமை செயலரை, இரு, எம்.எல்.ஏ.,க்கள் தாக்கியதை பார்த்ததாக, முதல்வரின் ஆலோசகர், வி.கே.ஜெயின் தெரிவித்தார்' என, நீதிமன்றத்தில், டில்லி போலீஸ் தெரிவித்தது.இது தொடர்பாக, வி.கே.ஜெயினிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக, ராஜினாமா செய்வதாக, கடிதத்தில், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement