ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவக்கம்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி-ஏத்தக்கோயில் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவங்கி உள்ளது. ஆனால் முறையான மாற்றுப்பாதை வசதி இன்றி வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.மதுரை-போடி அகல ரயில் பாதை பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதில் ஆண்டிபட்டி-ஏத்தக்கோயில் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் பாலம் கட்டும் பணிகள் துவங்கி உள்ளது. சுரங்கப்பாதை பணியால் இந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே கேட் வரை உள்ள ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.வாரச்சந்தை அருகே மாற்றுப்பாதைக்காக போடப்பட்ட மண் ரோட்டின் வழியாக தற்போது வாகனங்கள் சென்று வருகிறது. கன ரக வாகனங்கள் சென்று திரும்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை மற்றும் பாலம் கட்டும் பணிகள் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் நிலை இருப்பதால், மாற்றுப்பாதைக்கு முறையான வழிவகை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை