போராட்டம் வேண்டாம்!| Dinamalar

போராட்டம் வேண்டாம்!

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement

டார்ஜிலிங்கில், அமைதி நிலவினால் மட்டுமே, வளர்ச்சி சாத்தியம். இங்கு வசிக்கும் மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியில், மாநில அரசுக்கு அக்கறை உள்ளது. இங்கு நடக்கும் போராட்டங்களால், ஒருசில அரசியல்வாதிகள் மட்டுமே பலனடைவர்.
மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
இப்படி பேசுவதா?
ராஜ்யசபா தேர்தலில், சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும், நடிகை ஜெயா பச்சன் குறித்து, நரேஷ் அகர்வால் கூறியுள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை. மக்கள் பிரதிநிதிகளே இவ்வாறு பேசினால், அவர்களுக்கும், ரோமியோக்களுக்கும், எந்த வித்தியாசமும் இல்லை.
ஹர்சிம்ரத் கவுர், மத்திய அமைச்சர், அகாலி தளம்
சரியாக பயன்படுத்தணும்!
நீர்நிலைகளில் அணைகள் கட்ட, அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர். இது, நல்ல விஷயம். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை, அனைவரும் இதை வரவேற்கிறோம். ஆனால், அவை வளர்ச்சி திட்டங்களுக்கு சரியான வகையில் பயன்படுத்தப்படுவதில்லை.

நிதின் கட்கரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement