பாம்பனில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாம்பனில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்: கேரளா அருகே அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால், ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.இந்திய கடலில் இலங்கை தெற்கில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, நேற்று தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியது. இப்புயல் மாலத்தீவில் உள்ள மினிகாய் தீவில் இருந்து தென்கிழக்கில் 480 கி.மீ.,தொலைவிலும், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கடற்கரையில் இருந்து தென் மேற்கில் 390 கி.மீ.,தொலைவிலும், மாலத்தீவில் இருந்து கிழக்கு, வடகிழக்கில் 290 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.இதனால் இந்திய, அரபிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றினர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், பாம்பன் கடற்கரையில் படகுகள், கப்பல்களை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க மீன்துறையினர் அறிவுறுத்தினர். நேற்று ராமேஸ்வரம் தீவில் மேக மூட்டத்துடன் காற்று வீசியது, 4ம் நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டனர்.
துாத்துக்குடியில் 3ம் எண் கூண்டு : மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கையாக துாத்துக்குடி வ.உ.சிதம்பரம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.துாத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், நெல்லையில் ஆயிரம் படகுகளும் நேற்று மூன்றாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நேற்றும் நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. காற்றும் வீசியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை