தினகரன் கட்சி கொடியில் ஜெயலலிதா படத்துடன் குக்கர் சின்னம்? - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினகரன் கட்சி கொடியில் ஜெ., படத்துடன் குக்கர் சின்னம்?

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தினகரன் துவக்கவுள்ள புதிய கட்சியின் கொடியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் மற்றும் குக்கர் சின்னம் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டம், மேலூரில், நாளை நடக்கும் விழாவில், புதிய கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை, ஆர்.கே.நகர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., தினகரன் அறிவிக்க உள்ளார். கிட்டத்தட்ட, அ.தி.மு.க., பெயர் மற்றும் கொடியைப் போலவே, தினகரனின் கட்சி பெயரும், கொடியும் இருக்கும் என, அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கருப்பு, சிவப்பு நிறத்தின் இடையே, வெள்ளை நிறத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஒரு விரலைக் காட்டுவது போல படமும், குக்கர் சின்னமும் கொடியில் இடம் பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அ.தி.மு.க., நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., அறிவித்த, அ.தி.மு.க., கட்சிக் கொடியில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கை காட்டுவது போல, வடிவமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே பாணியில் தற்போது ஜெயலலிதா படத்தை, கட்சி கொடியில் இடம் பெற செய்ய தினகரன் முடிவு செய்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X