ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குடியாத்தம்: ரயிலில், பெங்களூருக்கு கடத்த முயன்ற, 900 கிலோ ரேஷன் அரிசியை, வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய்த்துறையினர் நேற்று, மேல் ஆலத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள முள்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 20 மூட்டைகளில் இருந்த, 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, காட்பாடி வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு ரேஷன் அரிசி, கடத்தவிருந்தது விசாரணையில் தெரியவந்தது. ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் குறித்து, வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை