யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் 17வது ஆராதனை விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் 17வது ஆராதனை விழா

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின் நூற்றாண்டு விழாவில், 17வது ஆராதனை விழா நேற்று நடந்தது. செந்தில் கனபாடிகள் தலைமையில், சிறப்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மூலவர் யோகிராம் சுரத்குமார் லிங்க சுவாமிக்கு, சிறப்பு அபி ?ஷகம் மற்றும் பூஜை நடந்தது. நேற்று காலை, 10:30 மணி முதல், 12:30 மணி வரை, பக்தர்கள் தங்களது அனுபவங்களை பகிர்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை, சற்குருநாத ஓதுவார் குழுவினரின், தேவார இசை நிகழ்ச்சி, மாலை, 6:15 மணி முதல், 8:15 மணி வரை 'ராமாயணமும் ராம்சுரத்குமாரும்' என்ற தலைப்பில், ஜோசப் சிறப்பு சொற்பொழிவாற்றினார். இன்று காலை முதல், இரவு வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை ஆஸ்ரம நிர்வாகி, ஓய்வு பெற்ற ஜஸ்டீஸ் அருணாசலம் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X