கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி மருந்து சப்ளை நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி மருந்து சப்ளை நிறுத்தம்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செங்கம்: செங்கம், புதுப்பாளையம் மருத்துவமனைகளுக்கு, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்து சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு, மாதந்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோல், பிறந்த குழந்தைகளுக்கு, மூன்று மாதம், ஆறு மாதம் என, பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செங்கம், புதுப்பாளையம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில், தடுப்பூசி மருந்து வினியோகம் ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது. இதனால், தனியார் மருத்துவமனைக்கு சென்று, கூடுதல் பணம் செலவழித்து தடுப்பூசி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, தடுப்பூசி மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை