தி.மலை அருகே சோழர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலை அருகே சோழர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே எறும்பூர் கிராமத்தில், சோழர் காலத்து கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த எறும்பூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில், வடக்கு பக்க சுவர் ஓரம், தொல்லியல் ஆர்வலரும், வரலாற்று ஆய்வாளருமான செல்வகுமார், கொற்றவை சிலை ஒன்றை கண்டெடுத்தார். செல்வக்குமார் கூறியதாவது: அவற்றை ஆய்வு செய்ததில் அழகிய முகத்துடன், எட்டு கரங்களுடன், சங்கு சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அபாயகர முத்திரையுடன் எருமையின் தலைமேல் நின்று கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் உள்ள பட்சீஸ்வரர் கோவில், மாணிக்கவாசகர் கோவில், ஒன்பதாம், நூற்றாண்டு இடைவெளியில், சோழர் காலத்திட்ட கட்டப்பட்டவை, எனவே, இவையும் அந்த காலத்தில் செதுக்கப்பட்டதை உறுதி படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை