காப்பகத்தில் சேர்த்த 2 சிறுமியர் பெற்றோரிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காப்பகத்தில் சேர்த்த 2 சிறுமியர் பெற்றோரிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், காப்பகத்தில் சேர்க்கப்பட்ட, இரண்டு சிறுமியரை, பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை அடுத்த, சே.ஆண்டாப்பட்டு கிராத்தை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு கடந்த மாதம், 19ல், திருமணம் நடக்கவிருந்தது. மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், சிறுமியை மீட்டு, பெரும்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இதேபோன்று, நவாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுமிக்கு கடந்த ஜனவரி, 22ல், திருமணம் நடக்கவிருந்தது. இதையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில், இரண்டு சிறுமியரின் பெற்றோர், 18 வயது முடியும் வரை, மகள்களுக்கு திருமணம் செய்ய மாட்டோம்; தொடர்ந்து படிக்க வைப்போம். குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, நீதிமன்றத்தில் முறையிட்டனர். விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, இரண்டு சிறுமியரையும், பெற்றோரிடம் ஒப்படைக்க, மாவட்ட சமூகநல அலுவலருக்கு நேற்று உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை