'டிவி' நடிகையை வைத்து மாணவர் சேர்க்கை: பள்ளியை ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டிவி' நடிகையை வைத்து மாணவர் சேர்க்கை: பள்ளியை ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவு

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த, ஒட்ட குடிசல் கிராமத்தில் ஷாஷம்மாள் வித்யாஷ்ரமம் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. அப்போது, 'டிவி' நடிகை திவ்யதர்ஷினியை வைத்து விளம்பரப்படுத்தி, மாணவர் சேர்க்கை நடத்தியது. மெட்ரிக் பாடத்திட்டத்திற்கு மட்டுமே, அனுமதி பெற்றுள்ள நிலையில், இங்கு, சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில் வகுப்புகள் நடப்பதாக கூறி, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த விளம்பரத்தை நம்பி, சே.அகரத்தை சேர்ந்த அய்யனார், தன் குழந்தைகளான சோனியா, ராகுல் ஆகியோரை, சி.பி.எஸ்.சி., பாடத் திட்டத்தில் படிக்க வைத்தார். சில நாட்களுக்கு முன், அப்பள்ளியிலிருந்து டி.சி., பெற்றுக்கொண்டு, இருவரையும் வேறு பள்ளியில் சேர்க்க சென்றார். டி.சி.,யை ஆய்வு செய்த பள்ளி நிர்வாகம், சி.பி.எஸ்.பி., பாடத்திட்டத்திற்கான அனுமதி பெறாதது தெரியவந்தது. இது குறித்து அய்யனார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவிடம் புகார் அளித்தார். மனுவை, சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி விசாரித்து, இது குறித்து மூன்று நாட்களுக்குள் விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாருக்கு, உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை