தாயை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற ராணுவ வீரர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாயை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற ராணுவ வீரர்

Added : மார் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கண்ணமங்கலம்: தாயை கொலை செய்ய, ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில், அவர் குனிந்ததால், மயிரிழையில் உயிர் தப்பினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் மனைவி காசியம்மாள்,78. இவருக்கு, இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சரவணன்,43; ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளைய மகன் கதிரவன், 37; ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கணவர் இறந்ததால், காசியம்மாள் தனியாக வசித்து வருகிறார். சென்னையில், தனியார் நிறுவனத்தில், சரவணன் பணிபுரிகிறார். சொத்து பிரச்னை தொடர்பாக, காசியம்மாளுக்கும், கதிரவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விடுமுறையில் ஊருக்கு வந்த கதிரவன், காசியம்மாளிடம், துப்பாக்கியை காட்டி, நகை மற்றும் ரேசன்கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை கேட்டு மிரட்டியுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால், தாய் என்றும் பாராமல், காசியம்மாளை, கதிரவன் துப்பாக்கியால் சுட்டார். காசியம்மாள் குனிந்து கொண்டதால், குறி தவறி உயிர் தப்பினார். துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், கதிரவவை வீட்டிற்குள் வைத்து பூட்டி, காசியம்மாளை காப்பாற்றினர். புகாரின் படி, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கதிரவனை கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை