Stephen Hawking, modern cosmology's brightest star, dies aged 76 | விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்| Dinamalar

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

Updated : மார் 14, 2018 | Added : மார் 14, 2018 | கருத்துகள் (62)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

லண்டன் : தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963 ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார்.


வாழ்க்கை வரலாறு:

இன்று காலமான விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 1942ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பகுதியில் பிறந்தவர். இவர் 21வது வயதில்(1963ம் ஆண்டு) மோடோர் நியூரான் எனும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். 1965 ம் ஆண்டு இவருக்கு ஜேன் வில்டி என்பவருடன் திருமணம் நடந்தது. ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.
அண்டவியலும்(Cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும்(Quantum gravity ) ஆகியவை இவர் ஆய்வு செய்ததில் முக்கியமானதாகும். கருந்துளையினும் ( Black holes) துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன. அதன் மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய் விடுகின்றன என ஹாக்கிங் தனது ஆராய்ச்சி முடிவில் ஆதாரத்துடன் காட்டினார். தனது பெயருக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார்.Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-மார்-201821:05:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எனது சிறுவயதில் "பொழுதுபோக்கு பௌதிகம்" புத்தக ஆசிரியர் யா பெரல்மான் ஒரு சிறு கதையில் அண்டத்தையும், பேரண்டத்தையும் விளக்கினார். பள்ளிப்பருவத்தில் எனது தந்தையார் வாங்கி தரும் "சைன்ஸ் டுடே" ஒரு பக்கம் விடாது படித்தது.. பிறகு அமெரிக்கன் கல்லூரியில் எனது பௌதீக உரையாளர் சுதர்சன் அடிப்படை பௌதீக அறிவை வளர்க்க, மேற்படிப்பின் போது ஐசக் அஸிமோவ், தனது "ரோபோட்டுக்களின் மூன்று விதிகள்" சொல்லி விஞ்ஞான நெறிமுறைகளை சொல்லி கற்பனையை கிளற, முறுக்கான இளவயதில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும், அய்ன் ராண்டும், பாரதியும் சிந்தனையை தூண்ட.. வேலை என்று வந்து, ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வது படித்து வியந்து.. ஸ்டீபன் ஹாக்கிங் மறையவில்லை. அவரது உடல் தான் தூங்கி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
கோமாளி - erode,இந்தியா
14-மார்-201820:19:21 IST Report Abuse
கோமாளி யாரோ ஒருவர் மாட்டு மூத்திரம் பற்றி பேசியிருக்கிறார்.. தமிழன் என்றும் தன் பெயர் வைத்திருக்கிறார்.. அவர் கொஞ்சம் மாட்டு மூத்திரம் மேல் காப்புரிமையை தேடிப் பார்க்கவும். பிடிக்கவில்லை என்றால் தமது ஒன்பது வாசல்களையும் அடைக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
14-மார்-201819:52:23 IST Report Abuse
பஞ்ச்மணி அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பது மறுப்பதற்கில்லை ஆயினும் நம்ப ஊர் ராமானுஜனை மறந்து போன மக்களை நினைக்கும் போது வெள்ளைகார மோகம் நம்ப கிட்ட கொஞ்சம் அதிகமோன்னு தோனுது அவர் கண்டுபிடித்த deatbed puzzle புதிரை விடுவிப்பதற்க்கு 90 வருடங்கள் ஆனது 2012 ஆண்டு அதை கண்டுபுடித்ததாக அறிவித்தார்கள் வாழ்க நம் வெள்ளைகார மோகம்
Rate this:
Share this comment
Vittal Anand - Chennai,இந்தியா
14-மார்-201821:05:00 IST Report Abuse
Vittal Anandpuzzle வெளியிட்டால் போறாது solution கூட தரவேண்டும்.. நான் கூட ஏராளமான puzzle விடை தெரியாமலும், சொல்லாமலும் விடக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X