In UP, Bihar Bypolls, BJP Faces 3/3 Loss | உ.பி., பீஹார் லோக்சபா இடைத்தேர்தல்: பா.ஜ., தோல்வி| Dinamalar

உ.பி., பீஹார் லோக்சபா இடைத்தேர்தல்: பா.ஜ., தோல்வி

Updated : மார் 14, 2018 | Added : மார் 14, 2018 | கருத்துகள் (184)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
BJP leading,By election,Uttar Pradesh, உத்தர பிரதேசம், சமாஜ்வாதி, பீஹார் இடைத்தேர்தல், பா.ஜ.முன்னிலை, ஐக்கிய ஜனதா தளம் , சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், புல்பர் லோக்சபா தொகுதி, அரேரியா லோக்சபா தொகுதி,  கோராக்பூர் லோக்சபா தொகுதி, Uttar Pradesh, Samajwadi, Bihar Preliminary,  United Janata Dal, Samajwadi Party candidate Nagendra Pratap Singh Patel, Bulber Lok Sabha constituency, Ariya Lok Sabha constituency, Gorakhpur Lok Sabha constituency, Gorakhpur, Jehanabad,உத்தர பிரதேசம் இடைத்தேர்தல்,  பீஹார் இடைத்தேர்தல், 
Uttar Pradesh By-election, Bihar By-election,

லக்னோ: உ.பி., பீஹாரில் நடந்த 3 லோக்சபாதொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. உ.பி., முதல்வர் யோகி தொடர்ந்து வெற்றி பெற்று வந்த கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ததால் கோராக்பூர் லோக்சபா தொகுதிக்கும், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ராஜினாமா செய்ததால் புல்புர் லோக்சபா தொகுதிக்கும், பீஹாரில் அரேரியா லோக்சபா தொகுதி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், பீஹாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. உ.பி.,யில் சமாஜ்வாதிக்கு, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது.

இதில், கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் குமார் 21 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றவர்.

துணை முதல்வர் கேசவ் மவுரியா ராஜினாமா செய்த புல்புர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 59 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டைஇழந்தது.
பஹாபூவா சட்டசபை தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் ரிங்கி ராணி பாண்டே வெற்றி பெற்றுள்ளார்.



பீகார் மாநிலத்தில் அராரியா லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் ராஷ்டிய ஜனதாதளம் கட்சி 61988 ஓட்டு வித்தியாசித்தில் வெற்றி பெற்றுள்ளார். ராஷ்டிய ஜனதாதள கட்சி வேட்பாளர் 5,09,334 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர் 4,47,346 ஓட்டுகள் பெற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (184)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-மார்-201820:37:35 IST Report Abuse
S.Baliah Seer பா.ஜ.க -வுக்கு இடைத்தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி.மாநில சட்டசபைத் தேர்தல்களில் மட்டும் வெற்றி "ஓடுமீன் ஓட ஒருமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு"புரியவில்லை? சிறியதை விட்டு பெரியதை பிடிக்கும் டெக்னிக் தான் இது.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
14-மார்-201818:56:17 IST Report Abuse
கைப்புள்ள இதிலிருந்து என்ன தெரியுது? பிராந்திய கட்சிகள் தான் ஜெயிக்கிதுன்னு சொன்னா, ஒன்னு பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி, நட்ப்பை மேலும் கூட்டுவது, பிராந்திய கட்சிகளின் மேல் சவாரி செய்வது, இது போன்ற முறைகளை கையாளலாம்.
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
14-மார்-201819:46:57 IST Report Abuse
sureshஷாபாடா , ஒரு வழியா கடைசி எலி வந்துடுச்சி, அதுவும் நெத்தி மேல விரல் வச்சி, மோடியின் கைபுள்ளையே வருக, சத்துடிக்கில் சிக்கிய எலியே வருக, காவியின் சாயம் வெளுத்த காவியின் குடிமகனே வருக காவிகளின் கதறல் இன்று நமக்கு கவியோசை, அந்த இன்னிசையை, மெல்லிசையாக்க வந்த HAND கொயந்தைக்கு ஒரு ஒஒஒஒஒஒஒஒ போடுங்கப்பா...
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
14-மார்-201820:10:04 IST Report Abuse
sureshதமிழகத்தில் பிராந்தி கட்சி இருக்கு, கர்நாடகாவில் காவேரி கட்சி இருக்கு. எது பெட்டெர் ?...
Rate this:
Share this comment
கைப்புள்ள - nj,இந்தியா
14-மார்-201821:47:31 IST Report Abuse
கைப்புள்ளதம்பி போங்க தம்பி முதல்ல முழு பரீட்சைக்கு படிச்சிட்டு மம்மி கொடுக்கிற பாலை குடிச்சிட்டு போயி படுங்க. வயசுக்கு மீறின செயல்களில் ஈடுபடாதீங்க. அரசியல் எல்லாம் பெரியவங்ககிட்ட விட்டுட்டு போயி நல்லா படிச்சு பாஸ் பண்ணனும், சரியா. மூணாப்புல இருந்து நாலாப்பு போக வேண்டாமா? மூனாப்புல அரசியல் பேசினா இவ்வளவு மெச்சூரிட்டி தான் இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-மார்-201818:51:36 IST Report Abuse
Vijay D Ratnam இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க உபியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை பெற்றதால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஜெயித்திருக்கிறது. ஆனால் பொது தேர்தலில் இது சாத்தியமே கிடையாது. தவிர பாஜகவை மக்கள் அப்பப்ப கொஞ்சம் தட்டி வைப்பதும் நல்லதுதான். தொடர்ந்து வெற்றிகளை கொடுத்துக்கொண்டு இருந்தால் தறிகெட்டு ஓட தொடங்கும். அதனால் இந்த தோல்வி பாஜகவுக்கு சுயபரிசோதனை செய்துக்கொள்ள தேவை. பாஜகவின் ஒரே எதிரி காங்கிரஸ் இந்த மூன்று தொகுதிகளிலும் டெபாசிட் பறிகொடுத்திருக்கிறதே அதைப்பற்றி பேசுங்க சார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை