தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Added : மார் 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Chennai weather,Balachandran,heavy rains,  தமிழகத்தில் கனமழை, சென்னை வானிலை மையம், மிதமான மழை , 
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், குமரிகடல் மீனவர்கள், அரபிக்கடல், Tamil Nadu heavy rains,  moderate rain,
Meteorological Center Director Balachandran, Kumari fishermen, Arabic sea,

சென்னை: தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (மார்ச் 14), காலை 8.30 மணியளவில் மினிக்காய் தீவுகளுக்கு தென் கிழக்கே 130 கி.மீ., தூரத்தில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை (மார்ச் 15 )முதல் படிப்படியாக, தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபி கடல் பகுதியில் வலுவிழக்கக்கூடும்.


தூத்துக்குடியில் மழை

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 24மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவாலாக மழை பெய்துள்ளது. ஒரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 20 செ.மீ., நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


கனமழை

அடுத்த 2 நாட்களை பொறுத்த வரையில்(மார்ச் 14, 15), தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


பலத்த காற்று:

குமரிகடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வரையிலும், சமயத்தில் 60 கி.மீ., வரை வீசக்கூடும். இதனால், குமரி, மாலத்தீவு கடல் பகுதிக்கு 14 மற்றும் 15 தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம். கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிக்கு 14 மற்றும் 15 தேதிகளில் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமாளி - erode,இந்தியா
14-மார்-201820:01:13 IST Report Abuse
கோமாளி ரெயின் ரெயின் 'டோன்ட்' கோ அவே...
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201815:51:44 IST Report Abuse
ராசா தென்காசி பகுதியில் கனமழை பெய்துவருகிறது
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201815:28:40 IST Report Abuse
a.thirumalai ஐய்ய்யோ மழையே எங்கள வுட்டுட்டு போயிடாத
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
14-மார்-201815:06:42 IST Report Abuse
Selvaraj Thiroomal டெல்டா நிலவரம் சரியில்லை,, இனிமேல் தண்ணியா எண்ணையா,, எது வரப்போவுதோ என்று தெரியாமல் இரண்டும்கெட்ட நிலையில் மக்கள் உள்ளனர்.. குறைந்தது தென்மாவட்டங்களாவது கைகொடுத்து, உற்பத்தியை சமம்செய்யும் என்று நம்பலாம். ஆனால் இரண்டு பக்க விவசாயிகள் நிலைமை வழக்கம்போல நிச்சயமற்றே தொடரும்.
Rate this:
Share this comment
Cancel
Chola - bangalore,இந்தியா
14-மார்-201813:19:17 IST Report Abuse
Chola மாதம் மும்மாரி பொழிய வேண்டும் இறைவா, நீ அருள் தா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை