Budget passed without discussion in LS as protests continue | லோக்சபாவில் விவாதமின்றி பட்ஜெட் நிறைவேற்றம்| Dinamalar

லோக்சபாவில் விவாதமின்றி பட்ஜெட் நிறைவேற்றம்

Added : மார் 14, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Budget debate, Budget 2018,Cauvery Board,பட்ஜெட் விவாதம், பட்ஜெட் 2018, எதிர்க்கட்சிகள் அமளி, மத்திய பட்ஜெட் 2018 , பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொட, காவிரி வாரியம் , ஆந்திரா சிறப்பு அந்தஸ்து , கில்லட்டைன் முறை, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், லோக்சபா, பார்லிமென்ட்,அருண் ஜெட்லி
 Opposition parties, Union Budget 2018, Parliamentary Budget Session,  Andhra Pradesh Special status, Gilltan system, Speaker Sumitra Mahajan, Lok Sabha,arun jaitley

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக லோக்சபாவில் மத்திய பட்ஜெட் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆனால், காவிரி வாரியம் கேட்டு அதிமுக எம்.பி.,க்களும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேச எம்.பி.,க்களும், நிரவ்மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.,க்களும் பார்லிமென்டில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பார்லிமென்டின் இரு அவைகளும் எந்தவித பணிகளும் நடக்காத நிலையில் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக பிப்.,1ல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் அமளி காரணாக பட்ஜெட் குறித்து விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நேரம் குறைவாக உள்ளதை சுட்டிகாட்டி, 'கில்லட்டைன்' முறையை லோக்சபாவில் கொண்டு வந்து பட்ஜெட்டையும், நிதி ஒதுக்கீடு மசோதாவையும் ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த முறையை ஏற்று கொண்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பட்ஜெட் மற்றும் நிதி மசோதாவை எந்தவிதமான விவாதமும் இன்றி குரல் ஓட்டெடுப்புக்கு அனுமதித்தார். தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறியதாக சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிற்பி - Ahmadabad,இந்தியா
14-மார்-201818:18:28 IST Report Abuse
சிற்பி பட்ஜெட் பற்றி பேச எதிர்கட்சிகளுக்கு எதுவுமில்லை. அவர்களுக்கும் இந்த முறை தெரியும். இந்த வழியில் பட்ஜெட் நிறைவேறி விடும் என்று. அதை தெரிந்து தான் இவர்கள் ஆட்டம் போட்டுள்ளனர். எல்லாம் வீணா போன வோட்டு வங்கி அரசியல். ஊர் பக்கம் வரும் போது நீ என்ன செய்தாய் என்றால்... பாராளுமன்றத்தை முடக்கினேன் என்று பீலா விடலாம் இல்லையா. அது தவிர வேறு என்ன உருப்பிடியாய் செய்ய முடியும் ? வங்கி ஊழல் பற்றி மோடி வாயை திறந்தால் காங்கிரஸ்சுக்கு தான் ஆபத்து. வைரமாகவும், தங்கமாவும் கமுக்கமாக வாங்கிக்கொண்டு வேலை செய்த காங்கிரஸ் தலைவனை கேட்க ராகுல் காந்திக்கு மானமில்லை. காந்தி என்று பொய்யான பெயரை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றும் இந்த குடும்ப மானம் மீண்டும் காற்றில் பறக்கும்.
Rate this:
Share this comment
Vittal Anand - Chennai,இந்தியா
14-மார்-201820:58:19 IST Report Abuse
Vittal Anandவேண்டுமென்றே நடப்பில் இல்லாத விஷயங்களை வைத்து விவாதம் செய்து வெளிநடப்பு செய்ய வைத்து படஜெட் விவாதம் நடக்கமுடியாமல் செய்துவிட்டார் மோடி. இறுதியில் நேரமின்மை காரணமாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
Rate this:
Share this comment
Cancel
L.Pannneerselvam - chennai,இந்தியா
14-மார்-201817:24:58 IST Report Abuse
L.Pannneerselvam இதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, பிள்ளயையும் கிள்ளிவிட்டுட்டு, தொட்டிலையும் ஆட்டுகிற கதையாக, எப்படியோ நினைத்ததை நடத்தி விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
14-மார்-201815:56:44 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM THIS IS AN UTTER FAILURE OF THIS PAKODA GOVT
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
14-மார்-201815:31:01 IST Report Abuse
Shriram இவர்கள் உண்மையாகவே இந்தியாவின் எதிரிக்கட்சிகள்தான்,,
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
14-மார்-201815:22:23 IST Report Abuse
தமிழர்நீதி உலகின் எங்கு இல்லாத ஹிட்லர் முறை . விவாதிக்காமல் GST அத்தனையும் அறிந்தவர் தெரிந்தவர்களுக்கு கொடுத்தது வாங்கிப்புட்டு ஏர் போர்டில் வழிஅனுப்பிவைப்பது . இதுக்குதான் கலாட்டா நாடகம் பிஜேபி ஏற்பாடு செய்து அல்வா கொடுப்பது .
Rate this:
Share this comment
Kalyanaraman S - Bangalore,இந்தியா
14-மார்-201815:40:14 IST Report Abuse
Kalyanaraman S@தமிழர்நீதி, "காமாலைகாரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்று கூற்றுக்கு சிறந்த இலக்கணமாக திகழ்கிறீர்கள். பட்ஜெட்டை நிறைவேற்ற விடவில்லையானால், அரசாங்க அலுவலர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் கிடையாது அது பரவாயில்லையா? உண்மையாகவே எதிர்கட்சிகளுக்கு அக்கறையிருக்குமானால், அவர்கள் விவாதத்தில் பங்கெடுத்து மக்களுக்கு தேவையான திருத்தங்களை கொண்டுவந்து அவற்றை நிறைவேற்றியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, பாராளுமன்றத்திற்கு வெளியே நடத்தவேண்டிய ஆர்ப்பாட்டங்களை உள்ளே நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை. ஏன் எல்லாம் உள்ளே போராட்டம் நடத்துகிறார்கள்? ஏனென்றால் அப்போதுதான் சம்பளப்படி கிடைக்கும் கவக்குதவாத MP க்கள் அவர்களுக்கு ஆதரவாளர்கள் எண்ணத்தை சொல்ல...
Rate this:
Share this comment
rajan - kerala,இந்தியா
14-மார்-201816:35:37 IST Report Abuse
rajanஇந்திய பொருளாதாரம் கடந்த கால ஆட்சியாளர்களால் ரேப் பண்ணி சின்னாபின்ன படுத்தப்பட்டு விட்டது. அதை சீரமைக்க ஒரு ஹிட்லர் அல்ல இரண்டு ஹிட்லர் முசோலினி வரை தேவை படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் ஜனநாயகத்தை காப்பாற்ற இரும்பு கரமிக்க சட்டமும் அதை அமல் படுத்தும் நேர்மை எனும் கடிவாளம் மிக்கவர்கள் ஹிட்லராகவும் முசோலினியாகவும் வரவேண்டும் என வாழ்த்துவோம். ஒரு பொருளாதார குற்றவாளியை தண்டிக்க நமிடம் வலுவான சட்டம் இல்லையா அல்லது சட்டத்தை மிஞ்சிய ஊழல் தான் சாத்தியமா எனும் கேள்வி தான் மிஞ்சுகிறது. இன்னும் அந்த சின்னத்தாயி கைதியின் நூறு கோடி அபராதத்தை வசூலிக்க சட்டம் அல்லாடி கொண்டிருக்கிறதோ. வாழ்க ஹிட்லர் அரசு. அத்தனை சட்டங்களும் கடுமையாக்க படவேண்டும்....
Rate this:
Share this comment
rajan - kerala,இந்தியா
14-மார்-201816:37:04 IST Report Abuse
rajanசமூக பொறுப்பற்ற ஊழல்வாதிகள் எதிர்கட்சிகள் நாட்டிற்கு தேவை இல்லை தானே....
Rate this:
Share this comment
Jose - RAK,ஐக்கிய அரபு நாடுகள்
14-மார்-201818:28:41 IST Report Abuse
Joseஹலோ Mr ராஜன் மற்றும் பிஜேபி பினாமிகளுக்கு, நீங்க எல்லாம் அறிவு இருந்தா இப்படி பேசமாட்டீங்க... பிஜேபி என்று சொன்னாலே அறிவு கெட்ட கூட்டம் மற்றும் அடிமை கூட்டம். அத அப்படியே நிரூபிக்கிறீங்க. முட்டாள்தனமா முடிவு எடுக்குற கூட்டம். எல்லாத்துக்கும் மேல பொய்யை அள்ளி விடுற கூட்டம். இன்று UP ல பிஜேபி என்ன ஆச்சு. ஜாதி, மதமுன்னு நாட்டை நாசம் பண்ணுறாங்க. அதுக்கு தான் ஆப்பு வச்சாங்க. இதுக்கு வக்காலத்து வேற.. வெக்கமா இல்லை....
Rate this:
Share this comment
rajan - kerala,இந்தியா
14-மார்-201820:09:28 IST Report Abuse
rajanசட்டம் சார்ந்த விஷயத்தில் உங்க இஸ்லாமியக் தண்டனை சட்டம் வரவேண்டும் என்பதை தான் இங்கு வலியுறுத்தி உள்ளோம் அன்பரே. இங்கு காட்சிகள் எதையும் குறிப்பிடவில்லை நாடு மக்களின் நலன் பற்றி தான்...
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
14-மார்-201821:32:34 IST Report Abuse
madhavan rajanஇன்று உ பி லே பி ஜெ பி என்ன ஆச்சு என்று கேக்குறவர் காங்கிரஸ் என்ன ஆச்சு என்பதையும் யோசிக்கணும். இந்த நிலைமைக்கு காங்கிரஸ் வந்தப்புறம் பி ஜெ பி தோக்கறது மட்டும்தான் அவர்களுக்கு ஆறுதல் போலும்....
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
14-மார்-201815:15:17 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam This is anticipated. They will again assemble to stalling.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை