பள்ளி மாணவி தற்கொலை : 2 மாணவர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி தற்கொலை : 2 மாணவர்கள் கைது

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே, பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான இரண்டு மாணவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தேவிரஅள்ளியை சேர்ந்தவர் தமிழரசி, 17; அகரம்அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்த, 17 வயது மாணவர்கள் இருவர், நேற்று முன்தினம், வகுப்பு முடிந்து வீடு திரும்பிய தமிழரசியை வழிமறித்து, தகராறு செய்துள்ளனர். தமிழரசியின் ஹால்டிக்ெகட்டை கிழித்து எறிந்துள்ளனர். மனமுடைந்த தமிழரசி, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தமிழரசி தற்கொலைக்கு காரணமான மாணவர்களை கைது செய்ய கோரி, தமிழரசியின் உறவினர்களும், தேவிரஅள்ளி மக்களும் சாலை மறியலில்ஈடுபட்டனர். இந்நிலையில், இரண்டு மாணவர்களையும், விசாரணைக்கு அழைத்து சென்ற பாரூர் போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், அவர்களை கைது செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, தேவிரஅள்ளியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை