பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் தாய், 10 மாத குழந்தை கருகி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் தாய், 10 மாத குழந்தை கருகி பலி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கள்ளக்குறிச்சி: பெட்ரோல் ஊற்றி, தீ வைத்ததில், தாய் மற்றும் 10 மாத குழந்தை இறந்தனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன், 37; இரு கால்களும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி. இவரது மனைவி கனகா, 30. இவர்களுக்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, கார்த்திகா,5, என்ற மகளும், சிவசந்திரன் என்ற, 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, குழந்தை சிவசந்திரனுடன் வீட்டின் ஹாலில் கனகா துாங்கினார். சரவணன் மற்றும் மகள் கார்த்திகா பக்கத்து அறையிலும் படுத்திருந்தனர். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, கனகா மற்றும் குழந்தை சிவசந்திரன் உடலில் பெட்ரோல் ஊற்றப்பட்டு, தீ வைக்கப்பட்டு, உயிருக்கு போராடினர்.அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து, தாய் மற்றும் குழந்தையை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே, குழந்தையும், கனகாவும் இறந்தனர்.இச்சம்பவத்தில், கணவர் சரவணனுக்கு மூக்கில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. மனைவி மற்றும் குழந்தையை, சரவணனே, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை