பம்மலுக்கு கல்குவாரி தண்ணீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பம்மலுக்கு கல்குவாரி தண்ணீர்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பம்மல்:பம்மல் நகராட்சியில்,கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க, கல்குவாரி குட்டை தண்ணீரை பயன்படுத்த திட்டமிட்டு, அரசின் ஒப்புதலுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பம்மல் நகராட்சியில், கோடை காலத்தில், குடிநீர் பிரச்னை அதிகரிக்கிறது. வாரத்திற்கு ஒருமுறைவாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் என்ற நிலை மாறி, தற்போது, மாதத்திற்கு இருமுறை என்றாகி விட்டது.
இதனால், பம்மல் நகராட்சி, காமராஜபுரத்தில் உள்ள, செங்கழுநீர் குவாரியில் இருந்து தண்ணீரை எடுத்து, பம்மல் மற்றும் அனகாபுத்துார் நகராட்சிகளின் குடிநீர் பிரச்னையை தீர்க்க திட்டமிடப்பட்டது. இந்த குவாரி, 300 அடி ஆழம் கொண்டது. 100 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த ஆண்டு, சில காரணங்களால், இத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்தாண்டும் குடிநீர் பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால், குவாரி தண்ணீர் திட்டத்தை செயல்படுத்த, நகராட்சி அதிகாரிகள் முனைப்பு காட்டியுள்ளனர்.திட்டத்திற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
20 லட்சம் லிட்டர்
ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.தனியாக சுத்திகரிப்பு மையம் அமைத்து, சுத்தம் செய்து, இரு நகராட்சிகளுக்கும், நாள் ஒன்றுக்கு, 20 லட்சம் லிட்டர் என்ற விகிதத்தில், ஒரு ஆண்டிற்கு தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளன.'அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணிகள் துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை