அமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: ராஜபாளையம் அ.தி.மு.க., நிர்வாகியாக இருந்தவர் மீனாட்சி சுந்தரம். 2014ல் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டார். ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப் பதிந்தனர். மீனாட்சி சுந்தரத்தின் சகோதரர் சிவசுப்பிரமணியன், 'இவ்வழக்கில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட சிலருக்கு தொடர்பு உள்ளது. ஆதாரங்கள் உள்ளன. அவர்களை வழக்கில் சேர்க்க வேண்டும். வேறு விசாரணை அதிகாரியை நியமிக்க உத்தரவிட வேண்டும்,' என ராஜபாளையம் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சிவசுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவு: வழக்கு விசாரணையை சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை