Bypoll shock for Modi-Shah reduces BJP to 272 MPs in Lok Sabha | இடைத்தேர்தல் தோல்வி: பா.ஜ. எம்..பி.க்கள் பலம் 272 ஆக குறைந்தது| Dinamalar

இடைத்தேர்தல் தோல்வி: பா.ஜ. எம்..பி.க்கள் பலம் 272 ஆக குறைந்தது

Added : மார் 15, 2018 | கருத்துகள் (104)
Advertisement
NDA,By elections defeat,2019 General Election,இடைத்தேர்தல் தோல்வி, பா.ஜ. எம்.பி.க்கள், லோக்சபா இடைத்தேர்தல்,   2019 பொது தேர்தல், தேசிய ஜனநாயக கூட்டணி,பிரதமர் நரேந்திர மோடி, 
 BJP MPs, Lok Sabha by Elections,  National Democratic Alliance, Prime Minister Narendra Modi,

உ.பி, பீஹாரில் நடந்து முடிந்த 3 லோக்சபா இடைத்தேர்தல் முடிவுகள் வாயிலாக 2014-ம் ஆண்டு நடந்த லோக்சபா பொதுத் தேர்தலில் பா.ஜ. பெற்ற 282 எம்.பி.க்களில் இதுவரை நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் 10 எம்.பி.க்களை இழந்து அதன் பலம் 272 ஆக குறைந்துள்ளது.

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை நாடு சந்திக்க ஒரு சில மாதங்களே உள்ளன. பா.ஜ.வின் பதவி காலம் நிறைவடைய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இன்னும் 7 லோக்சபா தொகுதிகள் காலியாக உள்ளன. இத்தொகுதிகளுக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் பா.ஜ.வின் வெற்றி தோல்வி 2019 பொது தேர்தலில் எத்தகைய கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முன்னாள் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்தி்த்தது பா.ஜ. இதில் 282 தொகுதிகளி்ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அன்று துவங்கி கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தாண்டு துவக்கம் வரை 20 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ. வெறும் 3 லோக்சபா தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. தவிர அதிகபட்சமாக காங்., திரிணாமுல் காங், ஆகிய கட்சிகள் தலா 4 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 3 தொகுதிகளிலும், தெலுங்கானா ராஷ்ட்ரீ சமிதி 2 என 16 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் தலா ஒன்று என மொத்தம் 20 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதன் மூலம் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகளை கொண்ட பார்லி.யில் பா.ஜ. 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது 7 தொகுதிகள் காலியாக உள்ளன. மீதமுள்ள 536 தொகுதிகளில் பா.ஜ.வின் பலம் 272 ஆக குறைந்துள்ளது. எனினும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையுடன் தான் உள்ளது.
இந்த சூழ்நிலையில் தே.ஜ. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளது. எனவே 2019-ம் லோக்சபா பொதுத்தேர்தலுக்கு முன்பாக நிகழப்போகும் கூட்டணி மாற்றங்கள் அரசியல் சூழ்நிலைகளை பா.ஜ. எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது மத்திய அரசின் பதவி காலம் நிறைவடையும் காலம் நெருங்கி வரும் போதே தெரியவரும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaiyai solren - chennai,இந்தியா
19-மார்-201814:15:29 IST Report Abuse
unmaiyai solren பி ஜெ பி அரசியல் நாடகத்தின் கதாநாயகனான ராமருக்கு மேக் அப் போடுவதற்கான நேரம் வந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Rajasekar - Trivandrum,இந்தியா
19-மார்-201809:04:39 IST Report Abuse
Rajasekar என்னமா நடிக்குதுங்க ரெண்டும்????? EVM மேல அதிக சந்தேகம் கிளப்புன உடனே தோல்வி மாதிரி காட்டி அப்படியே EVM பிரச்சனையை மூடி மறைக்க பாக்குதுகள்............. எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் இதன் பின்னணி தெரிந்து செயல்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Marshal Thampi - Nagercoil,இந்தியா
16-மார்-201819:04:09 IST Report Abuse
Marshal Thampi BJP பலம் இழந்தாலும் அது வரும் தேர்தலில் குஜராத் மும்பை தொழிலதிபர்களாகிய மோடிகளை திவலடைய செய்ததனால் வந்த பணத்தாலும் 2016 இல் பண்ணமதிப்பிழப்பு செய்ததனால் தன் கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ள கருப்பு பணத்தாலும் எதிர் கட்சி வேட்ப்பாளர்களுக்கு கொடுத்து அவர்களை கள பண்ணி செய்யவிடாமல் BJP வெல்வது திண்ணம்..
Rate this:
Share this comment
Cancel
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
15-மார்-201818:59:29 IST Report Abuse
புதுகை வானம்பாடி வாயாலே வடை சுடும் மன்னன் தான் மோடி ...............எவ்வளவு நாளைக்கு மக்களை ஏமாற்ற முடியும்
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
15-மார்-201818:52:07 IST Report Abuse
தமிழர்நீதி வேலையில்லா திண்ட்டாட்டம் , வங்கி சூறை ,வன்முறை , ஊழல் , அறிவீலித்தனம் , காவி தீவிரவாதம் , பசு குண்டர்கள் என்று கவலை கண்ணீர் இந்தியாவை சூழ்ந்தாலும் , மோடியை எதிர்ப்பவர்கள் தேச துரோகி , அரபி , பாகிஸ்தானி என்று இகழப்பட்டாலும் இதுபோல பிஜேபி தோற்கும் போது விழும்போது தேசநலன் கருதி மனது கொஞ்சம் மகிழத்தான் செய்கிறது . ஒரு ஆச்சர்யம் எப்படி ஓட்டுப்போடும் இயந்திரம் தில்லுமுல்லு மீறி இந்த வெற்றி . எது எப்படியானாலும் 2 MLA வைத்துக்கொண்டு 60 சட்டசபை உள்ள மாநிலத்தின் ஆட்சியை பிடிக்கிறார்கள் ஒரு MLA இல்லாத தமிழகத்தில் ஆட்சியை பிடித்து எரிக்கிறார்கள், இடிக்கிறார்கள் . பிஜேபி கு எண்ணிக்கை கவலை இல்லை . ஆட்சி ஹிட்லர் முறையில் பிடிப்பார்கள் .
Rate this:
Share this comment
Cancel
AURPUTHAMANI - Accra,கானா
15-மார்-201815:59:00 IST Report Abuse
AURPUTHAMANI முதலில் தமிழ் நாட்டில் இருக்கும் மிக சிறந்த அறிவாளிகளாகிய நாம் பிஜேபி இக்கு அறிவுரையை வாரி வழங்குவதை நிறுத்திவிட்டு. நாம் யாருக்கு ஓட்டு போடலாம்? இந்த பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் பன்னாடைகள் கொடுக்கும் தேச துரோகிகள் இவர்களை ஒழிப்பது, எப்படி? ஒரு நல்ல அரசாங்கத்தை கொடுக்க எப்படி ஓட்டு போடுவது என்று,முட்டாள் குடிகார இலவச தமிழனுக்கு கத்து கொடுங்கப்பா.. வந்துட்டானுங்க பிஜேபி இங்கு ஐடியா டன் கணக்கில் சொல்ல இங்கே கிழிஞ்சு தொங்கறது எல்லாம் தெரியுதா ?
Rate this:
Share this comment
Cancel
Hariharan Iyer - Nagpur,இந்தியா
15-மார்-201815:04:13 IST Report Abuse
Hariharan Iyer 38 சதவிகித வாக்குப்பதிவு தான் இதற்க்கு காரணம். வெற்றி பெற்று விடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் கோட்டை விட்டது பிஜேபி. கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. கோரக்பூரில் வெறும் 23000 வாக்குகள் தான் வித்தியாசம். பாராளுமன்ற தேர்தலில் இது மிகவும் குறைவான வித்தியாசம் தான். வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்ககள். 2019 தேர்தலில் பிஜேபி 350 இடங்களில் வெற்றி பெறும். இது நடக்கும்.
Rate this:
Share this comment
Power Punch - nagarkoil,இந்தியா
15-மார்-201815:43:04 IST Report Abuse
Power Punch வாக்கு சதவீதம் அதிகமாக ஆக ஆக தோல்விக்கான வாக்கு வித்தியாசமும் அதிகமாகும் தம்பி.... 2019 இல் 350 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறும்.. எதிர் கட்சிகள்......
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
19-மார்-201800:39:55 IST Report Abuse
தலைவா விடுங்க பாவம் ஐயர் கண்ணீர் விடுகிறார்...கவலை நீங்கி மீண்டும் பகோடா கட்சிக்கு விரைவில் செம்படிக்க வாழ்த்துகள்....
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
15-மார்-201814:34:19 IST Report Abuse
Sivagiri காங்கிரசை விரட்டியாச்சு . . . ஆனால் காங்கிரசால் காங்கிரஸுக்காக காங்கிரஸ்காரர்களாலேயே உருவாக்கப்பட்ட கூட்டாளிகள் - மாநில காட்சிகள் - காங்கிரசின் ஸ்லீப்பர் செல்கள் போல எல்லா மாநிலங்களிலும் நாடு முழுவதும் எக்கச்சக்கமான பண பலத்துடன் இருக்கின்றன . . . அவற்றை அழிப்பது அவ்வளவு எளிதல்ல . . . அமெரிக்காவின் சீக்ரட் ஏஜெண்டுகள் உலகம் முழுவதும் பரவி இருந்து நாச வேலைகளை செய்வது போல . . . இவர்கள் காங்கிரஸுக்காக விசுவாசமாக இந்தியா முழுவதும் வேலை செய்வதற்காக காங்கிரசால் ஏற்படுத்தப் பட்டவர்கள் . . . இவர்களை திசை திருப்பினால்தான் நல்லது . . . இது வரை ஒரே ஒருவர்தான் - பீகார் நிதிஷ் - கொஞ்சம் மாறி இருக்கிறார் - அது போல காஷ்மீர் மெஹபூபா - - இவர்களும் நம்பாத தகுந்த ஆள்கள் இல்லை . . .
Rate this:
Share this comment
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
15-மார்-201814:10:09 IST Report Abuse
சொல்லின் செல்வன் தலையில துண்டை போர்த்தியிருக்கற மாதிரி போட்டோ போட்டுருந்தா பொருத்தமா இருந்திருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Rajan - chennai,இந்தியா
15-மார்-201812:21:35 IST Report Abuse
Rajan பாஜக மொத்தமாக மோடியை நம்பி உள்ளது என்று தெளிவாக தெரிகிறது. அவர் தேர்தல் பரப்புரை செய்யாத தொகுதிகள் தான் கோரக்பூர், புல்பூர். யோகி பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிட்டார்.. என்றாலும் மக்கள் தீர்ப்பை வணங்கி ஏன் இந்த தோல்வி என்று ஆராயவேணும். சரி செய்ய வேண்டும். பத்து நாட்கள் முன்பு மேகாலயா., திரிபுரா தேர்தல் வெற்றிகளுக்கு மோடி முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
15-மார்-201814:50:41 IST Report Abuse
balakrishnanமக்கள் ஓட்டுப்போடவில்லை அது தான் உண்மையான காரணம், வெற்றி பெற்றால் மோடிக்கு ஜே போடுவதும், தோல்வி அடைந்தால் அவருக்கு தொடர்பே இல்லாதது போல பேசுக்குவதும் பி.ஜே.பி க்கு புகுத்தித்து அல்ல,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை