அரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:பெரும்பாக்கம் அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர், ஜோதி வெங்கடேசுவரன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:பெரும்பாக்கத்தில் உள்ள, அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில், 18 முதல், 30 வயதுக்குட்பட்ட, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.எஸ்.சி., (அருந்ததியர்) ஒதுக்கீட்டில், 18 முதல், 35 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமைவழங்கப்படும்.வயது, ஜாதி மற்றும் கல்வி சான்றிதழ்கள், ஒரு புகைப்படம் மற்றும் மொபைல் போன் எண் குறிப்பிட்டு, கல்லுாரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு, வரும், 27ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை