சீன அதிபரின் கனவு திட்டம் இரு தரப்பு உறவை பாதிக்குமா| Dinamalar

சீன அதிபரின் கனவு திட்டம் இரு தரப்பு உறவை பாதிக்குமா

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சீன அதிபரின் கனவு திட்டம் இரு தரப்பு உறவை பாதிக்குமா

பீஜிங்: அண்டை நாடான சீனாவின் நிரந்தர அதிபராக, ஜி ஜின்பிங் உள்ளதால், அவருடைய கனவு திட்டமான, பி.ஆர்.ஐ., எனப்படும் பல்வேறு நாடுகளை இணைக்கும் கட்டமைப்பு வசதி திட்டம், நம் நாட்டுடனான உறவில் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.அண்டா நாடான சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், நிரந்தர அதிபராகும் வகையில், சமீபத்தில் அந்த நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே மிகவும் வலுவாக உள்ள ஜி ஜின்பிங், மேலும் வலுவடைந்துள்ளார்.இந்நிலையில், பல்வேறு நாடுகளை இணைக்கும் வகையில், சாலை, ரயில், துறைமுக இணைப்பு வசதிகளை ஏற்படுத்தும், பி.ஆர்.ஐ., எனப்படும், 'பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்' திட்டத்தை, 2013ல் ஜின்பிங் அறிவித்தார்.அதன் ஒரு பகுதியாக, சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டம் அமைந்துள்ளது. இதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தவிர, எல்லையில் டோக்லாம் பகுதியில் கடந்தாண்டு, இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இரு நாட்டுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.இதற்கிடையில், நாடுகளுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தும் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக, பி.ஆர்.எப்., எனப்படும் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் சீனா கடந்தாண்டு ஈடுபட்டது. அதற்கான கூட்டத்தில் பங்கேற்காமல் மத்திய அரசு புறக்கணித்தது.அதற்கு முன், பி.ஆர்.ஐ., திட்டத்தின் கீழ் வங்கதேசம், சீனா, இந்தியா, மியான்மர் இடையே கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தும் முயற்சி துவங்கியது. மத்திய அரசு பின்வாங்கியதால், அது மந்த நிலையிலேயே உள்ளது. நம் நாட்டில் மேற்கொள்ளும் அனைத்து கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடுகளையும், பி.ஆர்.ஐ., திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் போவதாக சீனா கூறியுள்ளது.நிரந்தர அதிபராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் கனவு திட்டத்தில், மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று ஜின்பிங் எதிர்பார்க்கலாம். இரு தரப்புக்கும் இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக பல சுற்று பேச்சு நடந்துள்ளது. இந்நிலையில், எல்லைப் பிரச்னை மற்றும், பி.ஆர்.ஐ., திட்டம் ஆகியவற்றை தொடர்புபடுத்தாமல் பேச வேண்டிய நிலையில் இரு நாடுகளும் உள்ளன என்று, வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X