வாழைநாரில் பிரதமருக்குபட்டுச்சட்டை : தமிழக விவசாயிகளுக்கு தேசிய விருது | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழைநாரில் பிரதமருக்குபட்டுச்சட்டை : தமிழக விவசாயிகளுக்கு தேசிய விருது

Added : மார் 15, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 PM Modi,Scientist Murugan,Banana silk shirt,அறிவியலாளர் முருகன், வாழைநார் பட்டுச்சட்டை, பிரதமர் மோடி, வேளாண்மை ஆராய்ச்சி மையம், கிருஷி கர்மான் விருது, கிருஷி உன்னதி மேளா, மடத்துப்பட்டி விவசாயி சாமிநாதன், விவசாயி ராசாத்தி, Banana Sarkar, Prime Minister Modi, Agricultural Research Center,Banana silk, Krishi Karman Award, Krishi Mela, Madathupatti Farmer Swaminathan, Farmer Rajathi,

திருநெல்வேலி: துாத்துக்குடியை சேர்ந்த அறிவியலாளர் முருகன், வாழைநாரில் தயாரித்த பட்டுச்சட்டையை நாளை டில்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடிக்கு பரிசளிக்கிறார்.இந்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் பயிர் உற்பத்தியில் சாதனை புரிந்த விவசாயிகளுக்கு 'கிருஷி கர்மான் விருது' வழங்கப்படுகிறது.இதற்காக நாளை (மார்ச் 16) டில்லியில் நடக்கும் 'கிருஷி உன்னதி மேளா' நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கிவைக்கிறார்.2015--16ல் எக்டேருக்கு 1700 கிலோ உளுந்து உற்பத்தி செய்து சாதனை படைத்தார் நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில், மடத்துப்பட்டி விவசாயி சாமிநாதன்,அரியலுார் மாவட்டம் கயரலாபாத்தை சேர்ந்த விவசாயி ராசாத்தி, எக்டேருக்கு 9 ஆயிரத்து 563 கிலோ நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்தார். இருவரையும் பாராட்டி பிரதமர் மோடி, கிருஷி கர்மான் விருது வழங்குகிறார். இந்த விழாவில் பாராட்டப்படும் இன்னொரு அறிவியலாளர் துாத்துக்குடியை சேர்ந்த முருகன்,46. 1994ல் சென்னை சத்யபாமா பொறியியல் கல்லுாரியில் மெக்கானிக்கல் பிரிவில் பி.இ., பயின்ற இவர், பல்வேறு அறிவியல் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். அதில் ஒன்று வாழைநாரில் இருந்து உடைகள் தயாரிப்பது. பச்சை வாழைத்தண்டில் இருந்து நுட்பமான முறையில் பட்டுப்போல இழைகளை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை வடிவமைத்துஉள்ளார். அந்த இழைகளை வண்ணமேற்றி பின்னர் உடைகள் தயாரிக்கிறார்.இவ்வாறு பிரதமருக்காக ஆடை தயாரித்துள்ளார். அதனை நாளை 'கிருஷி உன்னதி மேளாவில்' மோடியிடம் வழங்குகிறார். 19ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழைநாரில் உடை தயாரிக்கும் திட்டம் குறித்து பேசுகிறார்.
முருகன் கூறியதாவது: இந்த இயந்திரம் எனது 16 ஆண்டுகால உழைப்பு. வாழைநார் உடை இயற்கையானது. உடலுக்கு ஏற்றது.ஜப்பான், அமெரிக்கா,ஸ்வீடன் போன்ற நாடுகளில் இதற்கு வரவேற்பு இருக்கிறது. தற்போது கண்டுபிடித்துள்ள இயந்திரத்திற்கு காப்புரிமை கிடைத்தால் உடைகளை தயாரித்து ஏற்றுமதி செய்யலாம்.இதன்மூலம் வாழைப்பயிர் உற்பத்தியும் அதிகரிக்கும். வாழைநாரில் தற்போதைய புதிய அறிமுகமாக, குழந்தைகள்,பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் தயாரித்துவருகிறேன்.இயற்கையான இந்த நாப்கின்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது, என தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manithan - Tirupur,இந்தியா
15-மார்-201811:00:00 IST Report Abuse
Manithan அருமை..வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
15-மார்-201808:38:52 IST Report Abuse
Rajalakshmi ஒரு பயம் உள்ளது. இதனால் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வாழைத்தண்டு கிடைக்காமல் போய் விடுமா ? அல்லது குறைவாக சந்தைக்கு வந்து விலை அதிகமாகி விடுமா ?? வாழைத்தண்டு மிகவும் நார்ச்சத்து நிறைந்தது. அனைவரும் தினம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
15-மார்-201808:05:36 IST Report Abuse
Amirthalingam Sinniah வாழ்த்துக்கள். ஏழைகளுக்கு வேலை வசதியை ஏட்படுத்தி கொடுங்க.
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201803:26:31 IST Report Abuse
R.Viswanathan Inventor s like Murugan should be extended all help including bank loans to facilitate rapid development of agriculture in our great country. May his tribe increase.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை