சங்கரா ஹாலில் கைத்தறி கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்கரா ஹாலில் கைத்தறி கண்காட்சி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:ஆழ்வார்பேட்டையில் உள்ள சங்கரா ஹாலில் நடக்கும், அகில இந்திய கைத்தறி மற்றும் கைவினை கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.'பாசுமணி' எனும் தன்னார்வ நிறுவனம், பல மாநில நெசவாளர்கள், கைவினைஞர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தி வருகிறது. அதன்படி, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சங்கரா ஹாலில், அகில இந்தியகைத்தறி மற்றும் கைவினை கண்காட்சி நடந்து வருகிறது.
அதில், பல மாநிலங்களைச் சேர்ந்த நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்கள், ஸ்டால்களை அமைத்துள்ளனர்.கை வேலைப்பாடுகள் நிறைந்த லம்பாணி, காஷ்மீரி, மதுபாணி சேலை, சிக்கன்காரி வேலைப்பாடு நிறைந்த ஆடை, கைத்தறி ஆடை, ஓவியம் உள்ளிட்ட கைவினை பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
மார்ச், 20ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.கண்காட்சியை முன்னிட்டு, கைத்தறி ரகங்களுக்கு, 20 சதவீதமும்; கைவினை பொருட்களுக்கு, 10 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை