தீ குளித்து மனைவி பலி கணவன் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ குளித்து மனைவி பலி கணவன் படுகாயம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மாங்காடு:குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த மனைவி பலியானார். இவரை காப்பாற்ற சென்ற கணவன் பலத்த தீக்காயமடைந்தார்.மாங்காடு, பத்மாவதி நகரை சேர்ந்தவர் கோபி, 35. ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சித்ரா, 34, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சித்ரா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோபி, சித்ரா உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது, கோபி உடலிலும் தீப்பிடித்தது. இருவரின் கூச்சல் சத்தத்தை கேட்ட, அருகில் வசித்தவர்கள் தீயை அணைத்து இருவரையும் மீட்டனர். பின் பலத்த தீக்காயமடைந்த இருவரையும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சித்ரா இறந்தார். கோபி தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை