'டவுன் சிண்ட்ரோம்' நோய்க்கு இலவச சிகிச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டவுன் சிண்ட்ரோம்' நோய்க்கு இலவச சிகிச்சை

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:''டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்,'' என, 'பெடரேஷன் ஆப் இந்தியா' அமைப்பின் தலைவர், சுரேகா ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர், சுரேகா ராமச்சந்திரன் கூறியதாவது:உலக டவுன் சிண்ட்ரோம் தினம், மார்ச், 21ல் கொண்டாடப்படுகிறது. 'டவுன் சிண்ட்ரோம்' என்பது, மனித உடலில் குரோமோசோம்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் நோய். பொதுவாக, ஒரு குழந்தைக்கு பிறப்பிலேயே, இரு குரோமோசோம்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
அதற்கு பதிலாக, மூன்று குரோமோசோம்கள் இருந்தால், அவர்கள், 'டவுன் சிண்ட்ரோம்' நோயால் பாதிக்கப்பட்டவர்கள். தேசிய அளவில், 30 ஆயிரம் குழந்தைகள், டவுன் சிண்ட்ரோம் நோயுடன் பிறக்கின்றன. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலக டவுன் சிண்ட்ரோம் தினத்தன்று, ஐ.நா.,வில் பேச உள்ளேன்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, கேரளாவில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே போல், தமிழகத்திலும் இலவசமாக சிகிச்சை வழங்க வேண்டும். மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை, சிறப்பு பள்ளிகளில் மட்டுமின்றி சாதாரண பள்ளிகளிலும் கல்வி பயில அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். '

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை