டிவி' தயாரிப்பு நிறுவனம் இழப்பீடும் வழங்க உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டிவி' தயாரிப்பு நிறுவனம் இழப்பீடும் வழங்க உத்தரவு

Added : மார் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:தயாரிப்பு நிறுவனம், 'டிவி' விலையுடன், இழப்பீடும் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, நாராயணா கார்டனை சேர்ந்தவர், கீர்த்திராஜன், 50. கல்லறை சாலையில் உள்ள, தனியார், 'டிவி' விற்பனை நிறுவனத்தில், 2015ல், 'சாம்சங் டிவி' வாங்கினார்.டிவியில், கோளாறு ஏற்பட்டதால், வாரண்டி இருந்தும், பழுதுநீக்க, சர்வீஸ் மையம் கட்டணம் வசூலித்தது. மேலும், டிவியில் ஏற்பட்ட கோளாறை, தயாரிப்பாளர் தான், சரி செய்ய வேண்டும் என, சர்வீஸ் மையம் தெரிவித்தது.
இதனால், டிவிக்கு கொடுத்த தொகையை திரும்ப வழங்குவதுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என, சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், கீர்த்தி ராஜன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில், நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர், உயிரொலி கண்ணன் பிறப்பித்த உத்தரவு:
டிவி தயாரிப்பு நிறுவனம் மற்றும் விற்பனை நிறுவனம் உரிய சேவை வழங்கவில்லை. மனுதாரர், டிவி வாங்க செலுத்திய, 32 ஆயிரத்து, 900 ரூபாயை, 12 சதவீத வட்டியுடன், இவ்விரு நிறுவனங்களும் வழங்க வேண்டும்.டிவி கோளாறு சரி செய்ய வசூலித்த, 4,523 ரூபாய், இழப்பீடு, 25 ஆயிரம் ரூபாயுடன், வழக்கு செலவு, 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
15-மார்-201806:18:05 IST Report Abuse
Chanemougam Ramachandirane இது அனைத்து பொருளுக்கும்வாரண்டி இருந்தால் பொருந்தும் மீறினால் நஸ்ட்ட ஈடு வசங்க வேண்டியிருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை